இவ்வாண்டு தேசிய தினம் கொண்டாட்ட விழா நாட்களில், நாடு முழுவதிலும் சமூக நுகர்வு பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை 27 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும் என்று சீன வணிக அமைச்சகத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. இவ்வாண்டின் விழா நாட்களில், நாடெங்கும் உள்ள சந்தைகளில் வணிகப் பொருட்கள் அதிகம் விற்பனை ஆயின. இந்தப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டதால், விற்பனை அளவு அதிகரித்துள்ளது. நகரங்களின் சந்தைகளில், கோலாகலமான விழாச் சூழல் காணப்பட்டுள்ளது. கிராமப்புறச் சந்தைகள் அமைதியாக உள்ளன.
|