
குற்றங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்று ஜெயில் கைதிகளாக இருக்கும் பெண்களில் அழகிப் போட்டி பிரேசில் நாட்டில் நடந்தது. முவாயிரத்து அறு மூறு பேர் கலந்து கொண்ட போட்டியில், ஜெர்மனியைச் சேர்ந்த மெலானிவுயர்ட்ஸ் கைதி அழகியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அவருக்கு தங்கத்தோடும் ஐயாயிரும் ரூபாய் ரோக்கமும் பரிசாகக் கிடைத்தது. ஆறு கிலோ போதைப் பொருளுடன் பிரசிலில் இருந்து புறப்பட்ட போது இவர் பிடிப்பட்டார். இவருக்கு ஐந்து ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சாலோபால்லாவில் உள்ள ஜெயிலில் கடந்த 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருக்கின்றார். 2008-ம் ஆண்டு இவர் விடுதலை ஆக இருக்கின்றார்.
ஆங்கிலம் பேசும் பறவை
ஆங்கிலத்தில் ஹலோ யூ ஆர் அக்லி (நீ ரோம்ப அழுக்காக இருக்கே) வெரி பியூட்டி புல் பை பை போன்ற வார்த்தைகளைப் போசும் பறவையைப்படத்தில் பார்க்கின்றார்கள். இதற்கு ஹில் மைனா என்று பெயர்.
சீனாவில் பீஜிங்கில் உள்ள ஜான்லி என்பவர் தான் ஹில் மைனாவுக்கு ஆங்கிலத்தில் பேசக் கர்றுக்கொடுத்து இருக்கின்றார். சீன மொழியிலும் இருபது முப்பது வார்த்தைகளை கற்றுக்கொடுத்து இருக்கின்றார்.
ஆயிரத்து தொல்லாயிரத்து எழுபத்திரண்டு முட்டைகளை தரையில் நிற்க வைத்து சாதனை
தைவானில் சியாயி கவுண்டியை சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் ஆயிரத்து தொன்னூற்று எழுபத்திரண்டு முட்டைகளை தரையில் நிற்கவைத்து உலக சாதனை படைத்தனர்.
உடையாத புது முட்டைகளை செராமிக் டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையில் நிற்கவைக்க வேண்டும். கினனஸ் உலக சாதனைப் புத்தக நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்து தொன்னூற்று எழுபத்திரண்டு முட்டைகள் நிற் வைக்கப்பட்டன.
இதற்கு முன்பு ஈராயிரத்து மூன்றாம் ஆண்டு அமெரிக்காவில் பிரிகாம்யங் பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து இரு நூற்று தொன்னூறு முட்டைகள் நிற்க வைக்கப்பட்டது தான் சாதனையாக இருந்தது.
|