 சிங்கப்பூரில் உள்ள ஒரு டிவி நிலையம் மொபைல் போனில் டிவி தொடர் ஒன்றை ஒளிபரப்ப இருக்கின்றது. ஆசியாவிலேயே இது முதல் முறையாகும். 30 வாரம் சீன மொழியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகும். இந்த மாதக் கடைசியில் இருந்து இந்தத் தொடர் தினமும் 3 நிமிடம் மட்டும் ஒளிபரப்பாகும். அடுத்த ஆண்டு முதல் 90 நிமிட டெலிவிஷன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். பிளீஸ் ஐ ல்வ் யூ என்ற தலைப்பில் இப்போது ஒளிபரப்பாக இருக்கும் இந்தத் தொடரில் தைவான் நடிகர்கள் நடத்து இருக்கின்றார்கள்.
மீடியாகார்ப் எந்ற சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான இந்த டி.வி.நிலையம் 10 டி.வி. தொடர்களை மொபைல் போனில் ஒளிபரப்புவதற்காக தயாரிக்க இருக்கின்றது.
பிறந்ததுமே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள்
இங்கிலாந்து நாட்டில் போர்ட்ஸ் மவுத் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு லாராவும், டேனியல் கார்மனும் பிரந்தனர்.
பிரசவத்தின் போது அவர்களின் தாயார்கள் ஜுலி, சூசன் ஆகியோர் மண்பர்கள் ஆனார்கள். குழந்தை பிறந்ததும். உன் மகள் தான் என் மருமகள் என்று சூசன் சொல்ல, ஜுலியும் அதற்கு சம்மதித்தார்.
இப்படிப் பேசி இருவரது திருமணத்தையும் தாயார்களே உறுதி செய்தி விட்டனர். ஆனால், அதன் பிறகு லாராவும், டேனியலும் பதினெட்டு வயது வரை சிந்திக்கவே இல்லை.
சந்தித்த ஒரு ஆண்டுக்குப் பிறகு இருவரம் ஒரே கல்லூரியில் படிக்கத் தொடங்கினர். பிறகு இருவரும் காதல் செய்தனர். இவர்கள் இருவரும் வருகின்ற செப்டெம்பர் மாதம் திருமண் செய்து கொள்ள இருக்கின்றார்கள்.
|