• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-12 13:56:29    
யோசனைகள்

cri
நேயர் நேரம் வி-----தாஜாஹாங் நேய்களே. நீண்ட இடை வேளைக்கும் பிறகு உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி நீங்கள் நலமா ரா------வணக்கம் நேயர்களே. சீனத் தேசிய விழா கொண்டாடிய மகிழ்ச்சியுடன் உங்களின் அன்பு உல்ளங்கலை ஏந்தி வகும் கடிதங்களைப் படிப்பது மகிழ்ச்சியான அனுபவம் வி-------ராஜா, கடிதங்களைப் பார்க்கலாமா ரா--------முலிலே,.அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்பட்ட சீனத் தேசிய விழாவுக்கு பற்பல நேயர்கள் வாழ்த்துக் கூறியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் வி-------சீன மக்களின் சார்பாகவும். சீன வானொலியின் சார்பாகவும் நன்றி. ரா-------திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் நேயர் கே அருண் இந்திய சுதந்திர நாளை ஒட்டி எழுதிய கடிதம், இந்திய சீன நட்புறவுக்காக சீன வானொலி அயராது பாபெட்டுவரும் வேளையில், நேயர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கடிதம் எழுதுவதோடு நின்று விடாமல், இந்திய சீந ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும் என்று எழுதியுள்ளார். தலைஞாயிரு நேயர் பரசலூர் பி எஸ் சேகர் ஜூன் திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளை, குறிப்பாக அறிவியல் உலகம், சீனாவில் இன்பப் பயணம் மலர்ச் சோலை ஆகிய நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். திருச்சி அண்ணா நகர் வி டி ரவிச்சந்திரன் ஜூலை 27 28 29 ஆகிய நாட்களில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். நலவாழ்வுப் பாதுகாப்பு என்ற தலைப்பில் பொருத்தம் இல்லாத நிகழ்ச்சிகளை வழங்குகிறீர்களே என்று கூறிவிட்டு, 29 7 05 நட்புப் பாலம் நிகழ்ச்சியில் இரண்டு மலேசியப் பெண்களின் தமிவைக் கேட்டதும் தமது மலேசிய வாழ்க்கை நினைவு நிழலாடியது என்கிறார். பல்வேறு தமிழ் மக்கள் சீனாவில் கால்பதித்து இருப்பதை இந்த நிகழ்ச்சி மூலமாக அறிய முடிகிறது என்று பாராட்டியுள்ளார். வி-----நேயர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. அபினி மங்கலம் அருண் கூறியது போல இருகை தட்டினால்தான் ஓசை உறவு மேம்பட சாதாணை மக்களாகிய நாம் பாடுபடுவோம்-சீன வானொலி மூலமாக, சரி ராஜா, அடுத்த கடிதம் ரா-----ஆரண் ஷைப்பேட்டை நேயர் வி பிரபு நட்புறவுப் பாலத்தில் 42 ஆண்டுகளாக பாடுபடும் சீன வானொலியின் வளர்ச்சிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். சேந்தமங்கலம் கே வெங்கம் ராமன் தமது கடிதத்தில் ஜூலை முதல் நாள் நட்புப் பாலத்தில் கரிகாலனின் பேட்டியைப் பாராட்டுகிறார். இந்த மாதிரி சீனா வரும் தமிழர்கள் தரும் பேட்டி, இனிமேல் சீனாவிற்கு வர இருப்போருக்கு வழிக்காட்டியாக உள்ளது என்கிறார். சேந்தமங்கலம் சே சுந்தரம், சீன வானொலியின் உணவு அரங்கமும், சீன மொழி பயிற்சியும் நன்று. பாட்ப்புத்தகத்தை எடுத்து 21ம் பக்கம் 3ம் பத்தியை பாருங்கள் என்று தமிழ்ச் செல்வம் கூறுவது மிகவும் உதவியாக இருக்கிறது.