சீனா, வேளாண் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தி கட்டமைப்பைச் சரிப்படுத்தி, தனித்தன்மை வாய்ந்த நவீன வேளாண் வளர்ச்சிக்காகப் பாடுபடும் என்று சீன தேசிய மக்கள் பேரவை தலைவர் வூ பாங் கோ தெரிவித்துள்ளார். இன்று பெய்சிங்கில் சீன வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் வேளாண்மை அறிவியல் கழகத்திலும் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அவர், மக்கள் தொகை அதிகமாகவுள்ள சீனாவில், சீன தேசியப் பொருளாதாரத்தின் அடிப்படையாக வேளாண்மை திகழ்கிறது என்றார். வேளாண்மை, கிராமப்புறம், விவசாயிகளின் பிரச்சினை ஆகியவை, சமூக-பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினையாகும் என்றும் அவர் கூறினார். வேளாண் அறிவியல் கல்வியில் முதலீட்டைத் தொடர்ந்து அதிகரித்து, பாரம்பரிய வேளாண்மையிலிருந்து நவீன வேளாண்மையாக மாறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
|