• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-20 21:59:53    
சீனாவின் 10வது தேசிய விளையாட்டுப் போட்டி

cri

சீனாவின் பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி அக்டோபர் 12ஆம் நாள் ஜியாங் சு மாநிலத்தின் தலைநகரான நான்ஜிங் நகரில் கோலாகலமாக துவங்கியது. சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகே முதலியோர் துவக்க விழால் கலந்து சிறப்பித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி, சீனாவின் அளவு மிக்க ஒட்டுமொத்த விளையாட்டு விழாவாகும். இது, சீனாவின் ஒட்டுமொத்த தேசிய ஆற்றலையும் சீன மக்கள் எல்லோரும் உடல் பயிற்சியில் ஈடுபடும் இயக்கத்தின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒரு ஜன்னலும் ஆகும்.

12ஆம் நாள் இரவு 60 ஆயிரம் பேர் அமரக் கூடிய நாஜிங் ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் விளக்கு வெளிச்சம் பிரக்காசித்தது. பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா இங்கே தான் நடைபெற்றது. சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் தலைவர் லியூ பொங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். இந்த தேசிய விளையாட்டுப் போட்டியானது, சீனாவில் ஓரளவு வசதி படைத்த சமூகத்தின் கட்டுமானம் முழுமையா நடைபெற்று, இணக்கமான சோஷலிச சமூகம் உருவாக்கப்படும் பின்னணியில் துவங்கியது என்று அவர் கூறினார். அனைத்து விளையாட்டு வீரர்களும் சீனாவின் விளையாட்டு எழுச்சியை வெளிப்படுத்தி, போட்டிகளில் விளையாட்டு நடையையும் தரத்தைக் முழுமையாக காட்ட வேண்டும் என்றும், இந்த விளையாட்டு போட்டி, விளையாட்டுத் துறையிலான ஒரு மாபெரும் கூட்டமாகவும் மக்களின் விழாவாகவும் விளங்க வேண்டும் என்று லியூ பொங் வாழ்த்துத் தெரிவித்தார்.

சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ் அவர்கள், பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதாக அறிவித்த பின், நான்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் ஒரே கர கோஷமும் ஆரவார ஒலியும் முழங்கின. 12 நாட்கள் நீடிக்கும் இந்த விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 32 விளையாட்டுகள் உண்டு, அவற்றில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற அனைத்து விளையாட்டுகளும் அடங்கும்.

சீனப் பெருநிலப் பகுதியின் 31 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசம், சிறப்பு தொழில் விளையாட்டு சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். துவக்க விழால் சுமார் பத்தாயிரம் நான்ஜிங் நகரவாசிகள் மிக அழகான உடல்பயிற்சி நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, சீன பொது மக்களின் உடல் பயிற்சி இயக்கத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.