• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-14 11:51:44    
யூ லன் நடிக்கும் பழைய திரைப்படங்கள்

cri

சீனத் திரைப்படத்தின் நூற்றாண்டு வரலாற்றில் தலைசிறந்த நடிகர்கள் மிகவும் அதிகம். யூ லன் அம்மையார், இவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

85 வயதான யூ லன், நரைத்த கூந்தல் உடையவர். சுருக்கம் நிறைந்த முகம். எளிமையான தோற்றம். இதனால், அவரை புகழ்பெற்ற ஒரு நடிகை என்று கூறுவது, மிகவும் கடினம். நினைவு படுத்திய போது, அவருடைய கண்களில் மகிழ்ச்சியின் ஒளியை காண முடிந்தது. சுவே காங்கிலுள்ள செங் கொடி, லின் குடும்பத்தின் கடை, புரட்சிக் குடும்பம் உள்ளிட்ட சுமார் பத்து திரைப்படங்களில் பல தலைச்சிறந்த சீன பெண்களின் தோற்றத்தை அவர் நடித்து, சீன ரசிகர்களுக்கு மகிழ்வளித்தார். அவர்களின் மனங்களில் ஆழப்பதிந்தார்.

யூ லன் ஒரு இளமையாக இருந்த போது, சீனா, ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரில் ஈடுப்பட்டது. அப்போது, 17 வயதான யூ லன், அற்போதைய சீன இளைஞர்கள் எதிர்பார்க்கும் புனித இடமான யன் ஆன் நகரத்துக்குச் சென்று, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ராணுவ மற்றும் அரசியல் பல்கலைக்கழகத்தில் நுழைந்து கற்றுக்கொண்டார். பிறகு, அவர், லு சுன் கலை நாடகக் குழுவில் சேர்ந்து, நடிகையாக வேலை செய்தார்.

1949ம் ஆண்டில், யூ லன், வெள்ளை ஆடை அணிந்த வீரர்கள் என்னும் திரைப்படத்தில் முதல் முறையில் நடித்தார். இது, சீன மருத்துவ பணியாளர்கள் போரில் பயின்று வளர்வதை வர்ணிக்கும் திரைப்படமாகும். அந்தத் திரைப்படத்தில் நடித்தது பற்றி நினைவு கூர்ந்த போது, அவர் கூறியதாவது:

அதுவே, நான் முதன் முறையில் நடித்த திரைப்படம். நாடகத்தில் இருந்து திரைப்படத்துக்கு மாறியதிலால், கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். கேமராவை எதிர்கொள்ளும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நாடக நடிப்பை அடிக்கடி பயன்படுத்தினேன் என்றார் அவர்.

அதன் பிறகு, யூ லன், சிறப்பான திரைப்பட நடிகையாக மாறினார். அவர் தமது நடிப்பு நுட்பத்தை உயர்த்தும் பொருட்டு தொடர்ந்து கற்றுக்கொள்ள பாடுபட்டார். லூன் சூ கோ என்னும் திரைப்படம், அவர் நடித்த இரண்டாவது திரைப்படம் ஆகும். சீனாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் லோ சே எழுதிய மேடை நாடகத்தின் அடிப்படையில், இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

1949ம் ஆண்டில் நவ சீனா நிறுவப்பட்டதன் முன்பும் பின்பும், பெய்ஜிங் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று வர்ணிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் யூ லன், பழைய பெய்ஜிங் நகரிலுள்ள சேங் ஞான்சி என்ற உழைப்பாளியை நடித்தார். பெண்ணினி நல்லெண்ணம் மற்றும் நேர்மையை, தெளிவாக வர்ணித்து, உணர்வு மாற்றங்களைக் காட்டினார். இந்தத் திரைப்படத்தின் வெற்றி, யூ லன் நடிப்புக் கலையில் ஒரு முக்கியத் திருப்பமாகும். இது குறித்து, அவர் கூறியதாவது:

1951ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், நான் வாழ்க்கை பற்றிக் கற்றுக்கொண்டேன் என்றார் அவர்.

லூன் சூ கோ என்னும் திரைப்படத்தில், யூ லன், பெய்ஜிங் மக்கள் கலை நாடகக் குழுவின் பல புகழ்பெற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக ஒத்துழைத்தார்கள். இதில் யூ லன் பலவற்றை கற்றுக்கொண்டார்.