சீனத் தேசிய விளையாட்டுப் போட்டிகள்
cri
 சீனாவின் பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி அக்டோபர் 12ஆம் நாள் ஜியாங் சு மாநிலத்தின் தலைநகரான நான்ஜிங் நகரில் கோலாகலமாக துவங்கியது. சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகே முதலியோர் துவக்க விழால் கலந்து சிறப்பித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி, சீனாவின் அளவு மிக்க ஒட்டுமொத்த விளையாட்டு விழாவாகும். இது, சீனாவின் ஒட்டுமொத்த தேசிய ஆற்றலையும் சீன மக்கள் எல்லோரும் உடல் பயிற்சியில் ஈடுபடும் இயக்கத்தின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒரு ஜன்னலும் ஆகும்.
|
|