இன்று உலகெங்கும் உபயோகத்தில் இருக்கும் ஸார்ட்-ஹாண்ட் என்ற சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் சர்ஐசக் பிட்மன் என்ற ஏழை ஆங்கில ஆசிரியர். தனது சுருக்கெழுத்து முறையில் அலுவலகங்களில் வேலை முறைகளில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். அந்த காலத்து ஆண்கள் ஏனோ சுருக்கெழுத்தில் அவவளவாக ஆர்வம் காட்டவில்லை. பெண்கள் ஆர்வமாக இதை படித்ததன் விளைவு பல அலுவலகங்களில் செக்ரட்டரிகளாக மாறிவிட்டார்கள்.
ஐசக் பிட்மன் ஒரு எழுத்தாளராகத் தான் தன் வாழ்வைத் தொடங்கினார். பின்னர் தனது சொந்த முயற்சியில் கல்வி கற்று பள்ளியின் ஆசிரியர் ஆனார். அவருக்கு படிப்பின் மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது.
1837-ம் ஆம்டு இது தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிட்டார் பிட்மன். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது ஆசிரியப் பணியை கைவிட்டார். சுருக்கெழுத்து உடனே அவருக்கு வாழ்வை வாரி வழஹ்கிவிடவில்லை. வேலையை விட்டபின் 20 வருடங்கள் எவ்வித நிரந்தர வருவாயும் இன்றி உழைத்தார். ஒரு ஷில்லிங் பணத்துக்காக யாருக்கு வேண்டுமானாலும் தனது சுருக்கெழுத்தை போதிக் கத்தயாராய் இருந்தார்.

1897-ல் இவர் இற்குகம் போது இவரது புகழ் உலகம் முழுவதும் பரவி இருந்தது. உலகின் பல நாடுகளஇல் பிட் மனின் சுருக்கெழுத்து முறையே நடைமுறையில் உள்ளது. சில நாடுகளில் தங்களுக்கென்று தனியாக சில முறைகளை வைத்திருந்தாலும் பிட்மனின் முறைக்கு அழிவேயில்லை.
பெரிய மரம்
உலகத்திலேயே மிகப் பெரிய மரங்கள் இரண்டு இருக்கன்றன. ஒன்று உயரத்தில் பெரியது. மற்றொன்று பருமனில் பெரியது. உயரத்தில் பெரிய மரத்தன் பெயர் செஞ்செக்குவாயா, பருமநில் பெரிய மரத்தின் பெயர் பெருஞ்செக்குவாயா இருண்ம் ஒரே இனம்.
செஞ்செக்குவாயாவின் உயரம் 111.5 மீட்டர் மரத்தன் சுற்றளவு 16 மீட்டர். இவ்வளவு பெரிய மரத்தன் இலை மிகவும் சிறியது. இலையன் நீளம் 2.5 செ.மீ. விதை 4 தெ.மீ. 5 ஆயிரம் விதைகளின் எடை அரை கிலோ தான். மற்றொரு இனமான பெருஞ்செக்குவாயா கொஞ்சம் உயரம் குறைவு, 83 மீட்டர் தான், ஆனால், சற்றளவில் இரண்டு மடங்கு பெரியது. அதாவது 33 மீட்டருக்கும் மேல், குறுக்களவு சுமார் 11 மீட்டர். இதன் வயது 4 ஆயிரம் ஆம்டுகளுக்கு மேல், மற்றொரு மரமான செஞ்செக்குவாயாவின் வயது 2 ஆயிரம் ஆண்டுகள்.
மரத்தை வெட்டி வீழ்திதனால் கூட இந்த மரம் சீக்கிரம் மப்படுப் போவதில்லை. இதன் உள்ளே வாழும் செல்களை பூச்சியும் அரிப்பதில்லை. தீயும் எளிதில் மற்றுவதில்லை. ஒரு மரத்தை அறுத்து ஒரு கிராமத்திற்கு வேண்டிய அத்தனை வீடுகளையும் கட்டிவிடலாம்.
ரத்த அழுத்தத்தை பாதிக்கும் காபின்
காபியில் உள்ள காஃபின், பருவ வயதினரின் ரத்த அழுத்த்ததை நேரடியாக உடனே பாதிக்கின்றது என்று ஆய்வு ஒன்றிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த பாதிப்பு, அவர்களின் பகல் பொழுதிலேயே வெளிப்படுகின்றது. குறிப்பாக ஆப்ரிக்க-அமெரிக்கர்களிடம் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது.
இந்த ஆய்வு பருவ வயதினரிடம் அவர்கள் காபி அருந்திய சிறிது நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, கையடக்க ரத்த அழுத்த சோதனை கருவி பயன்படுத்தப்பட்டது.
பூச்சிக்களை எதிர்க்கும் புதிய முட்டைகோஸ்
இந்தியா, கனடா மற்றும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் குழு, மரபணு பொறியியல் தொளில் நுட்பம் மூலம் புதிய வகை முட்டை கோஸ் வகையை தயாரித்துள்ளது.
உலகில் விளையும் மட்டைகோஸ் வகைகளில் டீ.பி.எம். எனப்படும் பூச்சிகளின் தாக்குதல் இருந்து வருகின்றது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள முட்டைகோஸ், இவ்வகை பூச்சிகலை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தது. இடி பி.டி.முட்டைகோஸ் உருவாக்கம் பற்றிய விவரங்கள் இந்திய உரிரித் தொழில்நுட்ப இதழில் வெளி வந்துள்ளன.
உடல் நலனுக்கு செலவிடுவது உயர்வு
ஆரோக்கிய பராமரிப்புக்காக இந்தியர்கள் செலவிடுவது அண்மைக்காலமாக அதிகிரித்து வருகின்றது. சென்ற பத்தாண்டுகளில், இத்யர்கள் உடன் நலனுக்கு செலவிடுவது, நூற்று அறுபது சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் அவர்கள் தகவல் தொடர்புக்காக செலவிடுவது ஐந்நூற்று இருபத்திரண்டு சதவீதம் உயர்ந்துள்ளது.
2002-03-ஆம் ஆண்டில், இந்தியர் ஒருவர் உண்வுக்காக செலவிடுவது நாற்பத்தைந்து சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், மருத்துவ பராமரிப்புக்காக அவர் செலவிடுவது ஐந்து புள்ளி ஏழு சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இந்தியர்கள் தகவல் தொடர்புக்காக செலிடுவது பூசியம் புள்ளி ஏழு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக அதிகிரித்துள்ளது.
|