• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-26 10:35:50    
ஜெர்மனியில் மக்கள் கொகை சரிந்தது

cri

ஜெர்மனியின் மக்கள் தொகை 2004-ம் ஆண்டில் சரிந்தது. கடந்த ஆண்டில் மக்கள் தொகையில் 31 ஆயிரம் பேர் குறைந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு 5 ஆயிரம் பேர் தான் குறைந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து குடியேறிய 83 ஆயிரம் பேரையும் சேர்ந்த பிறகும் கூட மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.

1992-ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியது ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகை 8 கோடியே 25 லட்சம் ஆகும். இதில் அறுபத்தேழு லட்சம் பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

கொள்ளைக்காரனாக மாறிய கோடீசுவரர்

ஜெர்மனி லாட்டரியில் 4.5 கோடி ரூபாய் பரிசு பெற்ற ஒருவர். பரிசுப்பணம் முழுவதும் தீர்ந்து போனதும் கொள்ளைக்காரனாக மாறினார்.

நாற்பத்தொன்பது வயதான அவருக்கு 1997-ம் லாட்டரி குழுக்கலில் 4.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. அதன் பிறகு வேலைக்குப் போவதை கைவிட்ட அவர் ஆடம்பரமாக செலவழிக்கத் தொடங்கினார்.

6 ஆண்டுகளில் பரிசுப் பணம் எல்லாம் செலவழிந்து போய் விட, அவர் மீண்டும் வேலைக்குப் போவதிலோ அல்லது வேலை இல்லாதவர்களுக்கு அரசாங்கம் தரும் உதவிப்பணத்தைப் பெறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை.

தெலவுக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க அவர், கொள்ளைக்ககாரனாக மாறினார். நிறுத்தப்பட்ட கார்களில் கொள்ளையடிப்பது, வீடுகளில் கொள்ளையடிப்பது என்று அறுபது குற்றச் செயல்கலில் அவர் ஈடுபட்டார். கடைசியில் போலீசிடம் பிடிபட்ட அவர் மீது கோர்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அடப்போவமே

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா நாட்டை நினைத்தாலே பகீர் என்கிறது. அந்த நாட்டில் வருடத்திற்கு பட்டினி மற்றும் ஊட்டச் சத்து குறைவால் 3 லட்சம் குழந்தைகள் மரணமடைகிறார்கள் என்கிறது, ஐக்கிய நாடுகள் சபையின் குழ்ந்தைகள் அமைப்பு.

இதை விடக் கொடுமை இந்த ஆண்டு எத்தியோப்பியாவின் பட்டினிச்சாவைத் தடுப்பதற்காக இது வரை போதுமான நிதி கிடைக்கவில்லை என்பது. இதனால் இன்னும் 60 நாட்களுக்கு மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறக்கக் கூடும் என்ற தகவலும் வெளியிகி இருக்கின்றது.

இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக 60 கோடி ரூபாய் தேவைப்புடகின்றது. இது தவிர ஒவ்வொரு வருடமும் எத்தியோப்பியாவை சுனாமிவேறு தாக்கி குடம் சேகத்தை விளைவிக்கிறதாம், இதனால்தான் அந்த நாடு தொடர்ந்து வறுமையின் பிடியில் வாடுகின்றது.