 சீனாவில் 56 தேசிய இனங்கள் இருக்கின்றனர். பல்வேறு தேசிய இன மக்கள் இணக்கமாகுவும் இன்பமாகவும் வாழ்கின்றனர். தே இனம், மியௌ இனம், துங் இனம், திபெத்தினம், கொரிய இனம், ஹுய் இனம், சுவாங் இனம், தஜிக் இனம் முதலிய 56 தேசிய இனங்களைச் சேர்ந்த 56 ஜோடிகளுக்கு, 16ந் நாள் சு யுங் குவான் பெருஞ்சுவரில் திருமணம் நடைபெற்றது. அவர்கள் தத்தமது தேசிய இனங்களின் ஆடைகளை அணிந்து வந்து, தங்களது திருமணத்தை முன்னிட்டு, மரம் நட்டினர்.
சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த அவர்களில் பலர் பெய்ஜிங்கிற்கும் பெருஞ்சுவருக்கும் வருகை தருவது இதுவே முதல் முறையாகும். பாரம்பரிய உடை அன்த புதுமணத் தம்பதிகளை பல பயணிகள் படம் எடுத்தனர். பல மணமகன்கள் மணமகள்களைச் சுமந்து கொண்டு, சுவர் ஏறினர். பெருஞ்சுவர் அவர்களின் நீண்டகால காதலுக்கு சாட்சி என்று அவர்கள் கூறினார். இந்த காட்சி பல வெளிநாட்டு பயணிகளை ஈர்த்துள்ளது.
17ந் நாள் அவர்கள் தியே ஆன் மன் சுதுக்கத்தில் தேசிய கொடி ஏற்றப்படும் விழாக் கண்டுகளித்தனர். தவிர மக்கள் மா மண்டபத்தில் நடத்திய சிறப்பு விழாவில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் அவர்களின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
|