• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-20 16:11:21    
தைவான் நீரிணையின் இரு கரை பரிமாற்றம்

cri

"சீனாவுக்குச் சேவை"என்ற நோக்கத்துடன் தைவான் நீரிணை பரிமாற்ற நிதியத்தின் குறிக்கோளாகும். ஆகையில் தொடர்புகளை வளர்த்து இரு கரைகளின் உடன்பிறப்புகளின் நியாயமான உரிமைகளையும் நலனையும் பேணிகாத்து தைவானுடன் விவகாரங்களைப் பற்றி கலந்தாய்வு செய்ய சீன பெருநிலப் பகுதி உடன்பட்டுள்ளது. அத்துடன் 1991ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 16ம் நாள் நீரிணை இரு கரை உறவு சங்கம் நிறுவப்பட்டது.

தைவான் நீரிணையின் இருகரை உறவு சங்கத்தின் பணியில் 4 முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று தைவான் தீவிலுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுடனும் வெளிநாடுகளில் வாழ்கின்ற அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களுடனும் தொடர்பு கொண்டு ஒத்துழைத்து அரசு சாரா ஆற்றலை வெளிக் கொணர்ந்து இரு கரைகளின் மூன்று நேரடிச் சேவைகளையும் விரைவுப்படுத்துவது. இரண்டு தைவான் நீரிணை கடல் பரப்பில் கள்ள கடத்தல் செய்வது கொள்ளையடித்தல் போன்றவற்றை ஒன்றுபட்டு கூட்டாக முறியடிப்பது பற்றி தைவான் நீரிணை நிதியத்துடன் விவாதிப்பது, மூன்று சங்கம் மூன்றாவது தரப்பின் கோரிக்கையை ஏற்று தைவான் நீரிணை கடல் பரப்பில் மீன் பிடிப்பு தொடர்பான சர்ச்சை, எதிரெதிர் தரப்பின் கட்டுப்பாட்டு இடங்களில் வசிப்பது மற்றும் இதர தொடர்புடைய பிரச்சினைகளை கையாள்வது குறித்து தொடர்புடைய தரப்புடன் இணைந்து தைவான் நிறுவனங்கள் அல்லது பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காண்பது. நான்கு தாய்நாட்டில் முதலீடு, வர்த்தகம் மற்ற பரிமாற்ற அலுவல் பற்றிய கொள்கை, சட்ட விதிகள் பற்றி தைவான் தீவிலுள்ள நிறுவனங்களுக்கும் பல்வேறு வட்டார பிரமுகர்களுக்கும் தகவல் வழங்கி சேவை புரிவது. அதேவேளையில் நீரிணை இருகரை உறவு சங்கம் தைவானில் பண்பாடு, கல்வியியல், விளையாட்டு, அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றம் முதலிய தகவல்களை சீனப் பெருநிலப் பகுதிக்கு வழங்குகின்றது. தைவான் நீரிணையின் இருகரை உறவு சங்கத்தின் தலைவர் வுவாங் தோ ஹென்.


1  2