கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளின் இறுதியில், புரட்சி குடும்பம் என்னும் திரைப்படத்தினால், அப்போதைய இளைஞர்கள் பலர் உணர்ச்சி வசப்பட்டனர். அந்தத் திரைப்படத்தில், யூ லன், மன உறுதியுடைய தாயாக நடித்தார். கணவனையும் மகனையும் இழந்து, கைதுசெய்யப்பட பிறகு, அசைக்க முடியாத புரட்சி வீரராக படிப்படியாக மாறினார். இந்தத்திரைப்படத்தினால், அவர், 1961ம் ஆண்டின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் தலைச்சிறந்த நடிகை என்ற பரிசைப் பெற்றார். யூலனை பொருத்தவரை, புரட்சி போராட்டத்திலான வீரர்கள் எனும் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு கலை உச்ச நிலையை எட்டியது. ஹுங்யியான் என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அந்தத்திரைப்படத்தில், அவர் நடிகையாக மட்டுமல்ல, இயக்குநராகவும் மாறினார். அந்தத் திரைப்படத்திலுள்ள கதாபாத்திரங்கள் பல ஆண்டுகள் சீனாவில் மிகவும் பிரபலமானவையாக இருந்தன. தலைமுறை தலைமுறையாக சீன ரசிகர்களுக்கு ஊக்கம் அளித்தது. யூ லன் நடித்த சியாங் சியே என்றும் பெண் கதாபாத்திரத்தில், துணிவான புரட்சியாளராக மட்டுமல்ல, மனைவியாகவும், தாயாகவும் நடித்தார். ஆகினார். அவர் எழில் மிக்க உணர்வுடையவர். நாட்டின் நலனுக்காக, அவர் தமது குடும்பத்தை இழந்தார்.
இந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்தை செல்வனே வர்ணிக்கும் பொருட்டு, யூ லன் பலமுறை சுன்சியிங் நகரத்தில் புலன் விசாரணை செய்தார். இந்த நாவலின் எழுத்தாளர், சியாங்சியேயுடன் தொடர்புடைய அனைவரையும் பேட்டிகண்டார். ஒரு நடிகை, வாழ்க்கையை நன்றாக உணர்ந்தால் தான், யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நடிக்கலாம் என்று அவர் எப்பொழுதும் கருதினார். அவர் மேலும் கூறியாவது:
வாழ்க்கையில் ஆழமாக நுழைந்து பார்க்க வேண்டும். உணர்ச்சியைப் பயன்படுத்தி நடிப்பது போதாது. வாழ்க்கை, வடிவம், எழுச்சி நிலைமை முதலியவற்றைக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
1960ம் ஆண்டில், யூ லன், சீனப் பண்பாட்டு துறையால் சீனாவின் 22 திரைப்பட நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1981ம் ஆண்டில், சீன திரைப்படத் துறை மறு மலர்ச்சி பெற்ற போது, யூ லன், 60 வயதினராக இருந்தார். சீன அரசின் விதிமுறையின் படி, அவர் ஒய்வு பெற்றார். திரைப்படத்தில் நடிக்க முடியாத நிலையிலும், அவர் திரைப்படத்துறையை மிகவும் விரும்பினார். அவர், சீனக் குழந்தைகள் திரைப்படக்கழகத்தின் இயக்குநராக வேலை செய்து, தமது சகோதர உழைப்பாளர்களுடன் இணைந்து, சீனாவில் ஒரே குழந்தைத் திரைப்படத்தின் உற்பத்தி, இயக்கம் மற்றும் ஆய்வு தளத்தை நிறுவினார். இதுவரை, குழந்தைகளுக்கு 50 திரைப்படங்களையும், 36 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இது தயாரித்துள்ளது. குழந்தைத்திரைப்படத்தை திரையிடும் போது, அவர் அடிக்கடி குழந்தைகளை அழைத்து திரையிட்டு, திரைப்படம் பற்றி விவாதம் நடத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முதியோரான யூ லன், குழந்தைத் திரைப்படக்கழக இயக்குநர் பதவியில் இருந்து விலகினார். ஆனால், அவர் கலை வழிகாட்டி பதவியை ஏற்றார். சீனக் குழந்தை திரைப்பட லட்சியத்துக்கும் குழந்தைகளின் கல்வி பிரச்சினைக்கும் அவர் முயற்சி செய்து வேண்டுகோள் விடுத்தார்.
யூ லனின் வீட்டில், கடிதங்களும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளும் நிறைந்து காணப்படுகின்றன. இவை, பல்வேறு இடங்களிலுள்ள குழந்தை ரசிகர்கள் அனுப்பியவை. குழந்தைகளுடன் தொடர்பு கொள்வது, இப்போது யூ லனின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
|