• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-25 17:16:04    
புல்லிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா

cri

மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகக் கூறி இந்தியாவை ஒரு கலக்குக் கலக்கினார் இராமன் என்றொரு தமிழக இளைஞர். இப்போது அமெரிக்காவில் புல்லிலிருந்து மின்சாரம் எடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். இல்லினாய்ஸ் என்ற பகுதியில் 14 அடி உயரத்துக்கு வளரும் மிஸ்காந்த்தஸ் என்னும் இந்தப் புல்லை 50க்கு 50 என்ற விகிதத்தில் நிலக்கரியுடன் கலந்து எரித்தால் மின்சாரம் கிடைக்கின்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது வரை இந்த அழகான உயரமான புல் வீட்டு அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த புல் வளரும் போது காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்கின்றது. அதை எரிக்கும் போது அந்தக் கரியமில வாயு திரும்ப எரிக்கப்பட்டு விடுகின்றது. இதனால் புறவெளியில் கரியமிலவாயு கலக்காமல் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகின்றது. மனித உடம்பின் நோய்களை எதிர்க்கும் திறன் பெற்ற மோனோக்குளோனல் என்னும் நுண்ணுயிரிகளை ஒரு கோழி முட்டையில் உருவாக்குவதில் அமெரிக்க மரபணு நிறுவனம் ஒன்ரு வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சாதனையால் மருந்து வச்சிகிளைச் செலவு குறையும் என எதிர்பார்க்கபடுகின்றது. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 1.3 மில்லிகிராம் அளவுக்கு இந்த மோனோக்ளோனல் நுண்ணுயிரிகள் கலந்துள்ளன.

10 முதல் 100 மடங்குவரை செல்களைக் கொல்லும் திறமையை இந்த நுண்ணுயிரிகள் பெற்றுள்ளன. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எய்ட்ஸ் தடுப்பு ஊசி மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு அது பாதுகாப்பானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தெந் சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள எய்ட்ஸ் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இந்த ஊசிமருந்து செலுத்தப்பட்ட 8 தொண்டர்களுக்கு கடைசி ரத்த பரிசோதனையும் உடல் நலச் சோதனைகளும் செய்யப்பட்டன. பக்க விளைவுகள் எதுவும் ஏற்பட்டதாக இந்த சோதனையில் தெரிய வில்லை. ஆனால் அவர்கள் உடம்பில் வேறு ஏதாவது கிருமிக் கொல்லி நுண்ணுயிரிகள் தோன்றியுள்ளனவா என்று மேலும் சோதனைகள் நடத்த வேண்டியுள்ளது என்று ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்தார். ஆன்ட்டிபயாட்டிக் மருந்து நோய்களைக் குணப்படுத்த மனிதர்களுக்குப் பயன்படுகின்றது. ஆனால் உலகில் உள்ள ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளில் பாதியளவு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி பன்றி போன்ற கால்நடைகளுக்குத் தீவனத்தில் கலந்து தரப்படுகின்றன. தீவனத்தோடு ஆன்ட்டிபயாட்டிக் உண்ணும் பன்றியும் கோழியும் விரைவாகக் கொழுக்கின்றன. சந்தையில் நல்லவிலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாட்டிக்கை உபயோகிக்கும் போது நோய் எதிர்ப்பு நுண்ணுயிரிகளின் எதிர்ப்புத் திறன் குறைந்து விடுகின்றது. இதனால் கோழி பன்றிகள் மூலம் நோய் பரவும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. ஜப்பானில் முதியோர்களின் பராமரிப்புக்காக எந்திரமனிதர்களை உருவாக்குகிறார்கள். மக்கள் முதுமை அடைவது அதிகரித்து வேலைக்கு ஆள்கிடைப்பது குறைந்துவிட்டதால் ஒரு நிறுவனம் தானாகவே இயங்கக் கூடிய எதிரே ஏதேனும் பொருள் தட்டுப்பட்டால் ஒதுங்கிப் போகக் கூடிய சக்கரநாற்காலியின் மூல உருவை உருவாக்கியுள்ளது. 2015க்குள் ஜப்பானில் நான்கில் ஒருவர் 65 வயதுக்கு மேல் முதுமை அடைவார்கள் என்பதால் தொழிற்சாலை உபயோகத்திற்கு அல்லாத ரோபோக்களுக்கு தேவை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. படுக்கை அருகே இருந்து நோயாளிக்கும் முதியவர்களுக்கும் பிஸியோ தெரப்பி சிகிச்சைதரும் எந்திர மனிதனை யால்காவா மின்னணு நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. ஆனால் இதன் விலை அதிகம். ஒரு எந்திரமனிதனின் விலை சூமார் 30 ஆயிரம் அமெரிக்க டாலர். ஆகவே, 2003க்குப் பிறகு 5 அல்லது 6 எந்திர மனிதன்கள்தான் விற்பனை ஆகியுள்ளன. 100 கிலோ எடையில் 1.65 மீட்டர் உயரத்தில் பெண்ணைப் போல உடை அணிந்து உங்களுடன் இணைந்து நடனமாடும் ஒரு எந்திரப் பெண்ணும் ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த எந்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா?