• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-25 14:05:41    
உலக கோப்பை ஆடவர் மேசை பந்து போட்டி

cri

சீன வீரர்களான வாங் லி ச்சின், மா லின், வாங் ஹௌ ஆகிய மூவரும் அக்டோபர் 21ஆம் நாளன்று தத்தமது பிரிவில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்று, பெல்ஜியாவில் நடைபெற்றுவரும் 2005 உலக கோப்பைக்கான ஆடவர் மேசை பந்து போட்டியின் கால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை முதன்முதலில் பெற்றுள்ளனர்.

இந்த உலக கோப்பை ஆடவர் மேசை பந்து போட்டியில் கலந்துகொள்பவர்கள் எல்லாரும் உலக மேசை பந்து அரங்கில் புகழ் பெற்று வீரர்கள். அவர்களில் பல்வேறு கண்டங்களின் சாம்பியன்களும், சர்வதேச மேசை பந்து சம்மேளனம் வழங்கிய தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் வீரர்களும் இடம்பெறுகின்றனர்.

சர்வதேச மேசை பந்து சம்மேளனம் வழங்கிய புதிய பட்டியலின் படி, வாங் லி ச்சின், ஜெர்மனியின் போல், மா லின், வாங் ஹௌ ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர். அவர்கள், இந்த போட்டியின் விதை வீரர்கள் என்ற முறையில் நான்கு பிரிவுகளில் பிரிந்திருக்கிறார்கள்.

உலக சாம்பியனான வாங் லி ச்சின் 21ஆம் நாள் காலை 4-1 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மிசெல்லைத் தோற்கடித்தார். அன்று இரவு 4-0 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் ஒ சங் இன்னைத் தோற்கடித்தார். மா லின் 4-1 என்ற செட் கணக்கில் இந்த போட்டியை ஏற்பாடு செய்த பெய்ஜியத்தின் வீரர் சைஃபரைத் தோற்கடித்தார். சீன வீரர் வாங் ஹௌ அன்று மிக சிறந்த நிலையில் இல்லாததால், அவர் கடுமையாக போராடிய பிறகு தான் இரண்டு ஆட்டங்களிலும் 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

21ஆம் நாள் அன்று, பைரோ ரஷியாவின் வீரர் சாம்சோனோவ் ஜெர்மனியின் போல்லை தோற்கடித்து கால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்றார். அக்டோபர் 22ஆம் நாள் முற்பகல், போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன. வேறு நான்கு பேரும் கால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்றுள்ளனர். 22ஆம் நாள் இரவு கால் இறுதிப் போட்டி நடைபெற்றது.  

23ஆம் நாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜெர்மன் வீரர் போல் 4-3 என்ற செட் கணக்கில் சீன வீரர் வாங் ஹௌவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீரர் வாங் ஹௌ இரண்டாம் இடத்தையும் மாலின் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இத்துடன் 2005 ஆடவருக்கான உலக கோப்பை மேசை பந்து போட்டி நிறைவடைந்தது. 

இந்த போட்டிக்கான மொத்த பரிசு தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலராகும். அவற்றில், சாம்பின் பட்டம் பெற்றவருக்கு 44 ஆயிரம் அமெரிக்க டாலரும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு 22 ஆயிரம் அமெரிக்க டாலரும், மூன்றாம் இடம் பெற்றவருக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும்.