| 
எச்ஐவி கிருமி தொற்றியர்களின் எண்ணிக்கை
 
 
 
cri
 
| எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை துறையில் சீனா உற்சாகத்துடன் பயன் தரும் நடவடிக்கை மேற்கொண்டு போதிய நிதி உத்தரவாதம் அளித்துள்ளது. 2010ம் ஆண்டில் எச்ஐவி கிருமி தொற்றியர்களின் எண்ணிக்கையை 15 லட்சத்துக்குள் கட்டுபடுத்த சீனா எதிர்பார்க்கின்றது. சீனாவின் சுச்சான் மாநிலத்தின் சூங்சிங் நகரில் நேற்று நடைபெற்ற சீனாவின் முதலாவது பால் நோய் தொடர்பான மருத்துவியல் சர்வதேச கருத்தரங்கில் பேசிய சீன பால் நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு சிகிச்சை சங்கத்தின் தலைவர் தைச்சிதன் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்தியுள்ளது என்றார். கடந்த சில ஆண்டுகளில் மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் இத்துறைக்கு ஒதுக்கி வைத்த தொகை சில 100 கோடி யுவானை எட்டியது என்று அவர் சொன்னார்.
1985ம் ஆண்டில் சீனாவில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது முதல் இதுவரை சீனாவில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எச்ஐவி கிருமி தொற்றியர்களும் 80 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகளும் உள்ளனர் என மதிப்பிடப்படுகின்றது. எய்ட்ஸ் நோய் பரவல் நிலைமை மோசமாகியுள்ளது. |  |