• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-24 21:12:35    
போலி குடும்பங்களும் அசல் குழந்தைகளும்

cri

14 வயது ச்சாங் லிச்செங் (Zhang Li Zheng)பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது 'அம்மா' அவனை அன்புடன் வரவேற்கிறாள். கழற்றித்தரும் கோட்டை வாங்கி உரிய இடத்தில் மாட்டுகிறாள். மற்ற மூன்று பையன்களுடன் உட்காரவைத்து இரவு உணவு பரிமாறுகிறாள்.

அவளைப் பார்த்தால் நான்கு குழந்தைகளுக்கு தாய் என்று சொல்ல முடியவில்லை. உண்மைதான். அவள் அவர்களுடைய தாய் இல்லை. அந்தப் பையன்கள் யாரோ, இவள் யாரோ. ரத்த உறவு கிடையாது. ஆனாலும் பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தைகளிடம் காட்டுவது போல் பரிவும் பாசமும் காட்டுகிறாள். வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த, அந்த 4 சிறுவர்களும் ஒரே வீட்டில் இந்தப் 'போலி'த் தாயின் அன்பான அரவணைப்பில் வளர்கிறார்கள். இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் ஆதாரமாகத் திகழ்வது வீடற்ற குழந்தைகள் மீட்பு மையம் என்ற அமைப்பு. சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹெனான் மாநிலத்தின் தலைநகரான Zheng Zhou நகரில் இந்த மையம் 1995இல் ஏற்படுத்தப்பட்டது.

வீட்டை விட்டு ஓடிப்போய் தெருக்களில் தறுதலையாய் அலையும் சிறுவர்களை இந்த மையம் தேடிப்பிடித்து அவர்களை அவர்களது சொந்தக் குடும்பத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கு முன்னால், போலிக்குடும்பத்தில் தங்க வைத்து சீர்திருத்தும் பணியைச் செய்து வருகிறது. இந்த மையத்துடன் பல போலிக் குடும்பங்கள் இணைந்துள்ளன.

போக்குவரத்து மையமாகத் திகழும் Zheng Zhou நகரில் தெருவோரக் குழந்தைகளை காணமுடிகிறது. வீட்டை விட்டு ஓடும் குழந்தைகள் பலரும் அங்கே சென்று விடுகின்றனர். 2003 ஆகஸ்ட் முதல் 2004 செப்டம்பர் வரை Zheng Zhou தெருக்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான அநாதைக் குழந்தைகள் அலைந்து திரிந்ததாக பீகிங் பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை பேராசிரியர் லியு சிட்டோவ் மதிப்பிட்டுள்ளார். நாடெங்கும் சுமார் ஒரு லட்சத்து 80,000 அநாதைக் குழந்தைகள் காணப்படுவதாக குடிமை விவகார அமைச்சகத்தின் புள்ளி விவரம் புலப்படுத்துகிறது. குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு இரண்டே காரணங்கள் உள்ளன. ஒன்று வறுமை, இன்னொன்று குடும்ப வாழ்க்கையின் சோகங்கள் என்று கூறுகிறார் அநாதைக் குழந்தைகள் மீட்பு மையத்தின் தலைவர் வேங் வான்மின்.