• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-25 14:39:44    
கொலையாளி யார் 2

cri
ஐவரும் பட்டாம்பபூச்சிகளாய் ஒவ்வொரு அறையாக நுழைந்து நுழைந்து வந்து கொண்டிருந்தனர்—தனித்தனியாக.

திடீர் எனம் பார்த்தால் அஞ்சில் ஒன்று மைனஸ். புயல் ஓய்ந்தது போல சத்தத்தைக் கானோம். எட்டிப்பார்த்த போது வடக்கு மாடத்திற்கு கீழே தரையில் விரிந்து கிடந்தாள் சளசள சரளா—பிணமாக!

மாடங்கள் அவ்வளவு உயரமாக இல்லை. குதித்தாலும் சாக முடியாது. சரளா எப்படிச் செத்தாள்? செத்தாளா? யாராவது அவளைச் செத்துப் போகச் செய்தார்களா? தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார் மக்கள் ஆயுத காவல்படையின் தலைமைக் காவலர் கேப்டன் சாங். நம்முடைய துப்பறியும் வோங்கிற்கு தகவல் பறந்தது. பெங்ஷுயி கலையில் வல்லவரான அவர் ஏதாவது துப்புச் சொல்ல மாட்டாரா? வடக்கு மாடம் வழியே எட்டிப்பார்த்ததுமே, "ரொம்ப ரொம்ப துரதிர்ஷ்டமான சம்பவம்" என்று சூள் கொட்னார் வோங்.

"சம்பவம் இல்லை இது. மேலோட்டமா பார்த்தா இது ஒரு சம்பவம். ஆனால் உண்மையிலே அப்படி இல்லே" என்றார் போலீஸ் அதிகாரி.

"அப்படியா? நீ பெரிய கெட்டிக்காரனோ?"

"இந்ாத பாருங்க பிணத்தோட தோள்களில் நகக்கீறல்கள்—நிச்சயமாக இது மரக்கிளைகளில் பட்டதில்லே, ஏன்னா இங்கு பெரிய மரங்கள் இல்லே. இவளோட புதுசா வாங்குன போலோ டிசர்ட் கிழிஞ்சிருக்கு—நெஞ்சுக்கு நேரே. அவளோட ஒரு ஷு மாடத்திலேயே இருக்கு. பை கூட அவளோட சேர்ந்து குதிக்கலை வார் பிஞ்சுபோய் மேலேயே இருக்குது. நிச்சயமா, மாடத்துல இவ போராடிருக்கா?" என்றார் போலீஸ் அதிகாரி.

"யாரோட?"

"அது தெரிஞ்சிட்டா கொலையாளியைக் கண்டுபிடிச் சுரலாமே."

"கண்டுபிடிங்க."

"அதுக்குத்தானே உங்களை கூப்பிட்டுருக்கோம்."

துப்பறியும் வோங் இனியும் போலிசை சீண்டக் கூடாது என்று தீர்மானித்து, தனது வேலையக் காட்டத் தொடங்கினார்.

"இங்க வா" என்று கருப்பாயியை அழைத்தார். பயந்து நடுங்கியபடியே வந்தாள்.

"இந்தாம்மா" என்பது போல சீனமொழியில் பேசினார். எங்கிருந்தோ ஒரு மொழிபெயர்ப்பாளர் ஓடிவந்தார். "செத்துப் போனவ பேரென்ன?"

"சரளா."

"உங்களுக்குள்ளே ஏதாச்சும் சண்டையா?"

"இல்ல. ஆனா"

"ஆனா." "இன்னைக்கி சாயந்தரம் சீன வானொலியில் பேட்டி ஒலிப்பதிவுக்கு கலையரசியை சந்திக்கிறோம். இவ நான்தான் பேசுவேன் என்று முரண்டு பிடிச்சா."

"சரி. இவளோட பிறந்த தேதி என்ன?"

வார் அறுந்து கிடந்த கைப்பைக்குள் துழாவி சரளாவின் பாஸ்போர்ட்டை எடுத்து பார்த்து விட்டுச் சொன்னாள்.