• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-27 08:26:02    
வெற்றி பெற்ற சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி

cri

சீன மக்கள் குடியரசின் பத்தாவது விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 23ஆம் நாள் சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் நாஜின் நகரில் நிறைவடைந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு நிரந்தரக் கமிட்டி உறுப்பினரும் தலைமை அமைச்சருமான வென் ஜியாபௌ பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைவதாக அறிவித்தார்.

பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கொடி இசை ஒலியின் பின்னணியில் மெல்லமெல்ல இறக்கப்பட்டது. 12 நாட்களாக எரிந்த ஒளிப் பந்தம் அணைக்கப்பட்டது. பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன் உள்நாட்டில் நடைபெற்ற கடைசி ஒட்டுமொத்த விளையாட்டு விழாவாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய ஒரு பன்முகப் பயிற்சியாகவும் இது கருதப்படுகின்றது.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் அமைப்பு கமிட்டி வழங்கிய புள்ளிவிபரங்களின் படி, ஜியாங் மாநில அணி 56 தங்கப் பதக்கங்களை வென்று முதலிம் பெற்றது. குவாங்துங் மாநிலம் 46 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பெற்றது. விடுதலை படை அணி 44 தங்கப் பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் அமைப்புக் கமிட்டியின் செயல் தலைவரும் ஜியாங் சு மாநிலத்தின் தலைவருமான லியாங் பௌ ஹுவா நிறைவு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் போது, நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் "மேலும் வேகம், மேலும் உயரம், மேலும் வலிமை" என்ற உணர்வை பெரிதும் வெளிப்படுத்தி, கஷ்டப்பட்டு போராடி, ஒற்றுமையுடனும் நட்புப்பூர்வமாகவும் நியாயமாகவும் போட்டியிட்டு, சாதனை புரிதல், நாகரிகமாக விளையாடுதல் ஆகிய இரண்டிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை வரவேற்க ஒரு வெற்றிகரமான பயிற்சியாக இது நடத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த விளையாட்டுப் போட்டிகளில், 15 பேர் 21 தடவையாக 6 உலக சாதனைகளை முறியடித்துள்ளனர். 7 பேர் 7 தடவையாக 6 உலக சாதனைகளை சமன் செய்தனர். 5 பேர் 6 தடவையாக 5 ஆசிய சாதனைகளை முறியடித்தனர். ஒரு அணியும் 19 பேரும் 26 தடவையாக 19 தேசிய சாதனைகளைப் புதுப்பித்துள்ளனர். நிறைவு நிகழ்ச்சிக்குப் பின், மாபெரும் கலைநிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது.