• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-27 16:26:52    
நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பு

cri

நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பு என்பது எண்ணெய் பற்றாக்குறையைச் சமாளிப்பதில் குறுகிய காலத்தில் பயன் தரும் வழி முறைகளில் ஒன்றாகும். அது அரசின் எரியாற்றல் பாதுகாப்புக்கு சேவைபுரின்றது. கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெற உத்தரவாதம் அளிப்பது அதன் நோக்கமாகும். அதேவேளையில் உள்நாட்டு எண்ணெய்ச் சந்தையில் விலை உயர்வையும் வீழ்ச்சியையும் கட்டுப்படுத்தும் திறமை அதற்கு உண்டு.

நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பு என்பது நெடுநோக்கு எரியாற்றல் திட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். உலகில் மிக பல பணக்கார நாடுகள் எண்ணெய் சிக்கனத்தையே முக்கிய நெடுநோக்குத் திட்டமாக நடைமுறைபடுத்துகின்றன. இப்போது நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பிற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று நெடுநோக்கு சேமிப்பு, இன்னொன்று எண்ணெய் சேமிப்பு. நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பு போர்க் காலத்திலும் அல்லது இயற்கை சீற்றம் ஏற்படும் போதும் நாட்டில் எண்ணெய் விநியோகம் தடங்கலின்றி நடைபெற பாதுகாப்பு தருவதாகும். எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாக கொண்ட எண்ணெய் சேமிப்பு ஆயத்த எண்ணெய் சிக்கநம் எனப்படுகின்றது. நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பு அமைப்பு முறை லாமநோக்கின்றி அரசின் எரியாற்றல் பாதுகாப்புக்கு சேவை புரிகின்றது.

நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பின் முக்கிய பொருளாதாரப் பயன் என்ன என்றால் சிக்கனத்தின் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட எண்ணெயை சந்தையில் விநியோகிப்பதன் மூலம் சந்தையில் ஏற்படும் நெருக்கடியைத் தணிவிப்பதாகும். எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்வது குறைக்கப்படும். எண்ணெய் விநியோகத் தட்டுப்பாட்டினால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பின் அளவு குறைக்கப்படும். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை பொறுத்தவரை, நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பு எண்ணெய் விநியோகத்தில் நிகழும் பற்றாக்குறையைத் தடுப்பதற்கான முதலாவது தடுப்பு நடவடிக்கையாகும். எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதே அதன் உண்மையான நோக்கம். தவிரவும், நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பில் வேறு சில பயன்களும் உண்டு. ஒன்று பொருளாதாரத்தை சரிப்படுத்துவதற்கான வழிமுறை அதிகரிக்கிறது. குறிப்பாக எரியாற்றல் நுகர்வுக்கு நேரம் பெறுவதாகும். இரண்டு, அச்சுறுத்தல் பங்கும் வகிக்க முடியும். எணஅணெய் விநியோகத்தில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் இடையூறுகளைத் தவிர்க்க முடியும். எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் விலையை ஒருநிலைப்படுத்தும் கொள்கையையும், உற்பத்தியளவை அதிகரிப்பதன் மூலம் விலையைக் கட்டுப்படுத்தும் கொள்கையையும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு மாறிமாறி செயல்படுத்துகின்றது. நெடுநோக்கு எண்ணெய் சேமிப்பினால் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தையும் அரசியலையும் ஒரே சீராக்க முடியும். எண்ணெய் விநியோகத்தில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் பாதிப்பையும் தடுக்க முடியும்.