சீனத் தொழில் துறையின் பொருளாதாரம் கடந்த ஒன்பது திங்களில் ஒட்டுமொத்த சீர்திருத்தம் மூலம் சீராக இயங்கி வருகின்றது. நாடு முழுவதிலும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள லாபம் 98830 கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 20 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியின் பொருளாதாரத் துறைத் தலைவர் Ma Li Qiang கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த ஒன்பது திங்களில், சீனாவில் குறிப்பிட்ட சில தொழில் நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்யும் போக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். நிலக்கரி, எண்ணெய் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது.
|