• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-26 08:40:20    
நல்ல கருத்துகள்

cri
நேயர் நேரம் ரா------நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு நேயர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வி-----தாஜாஹாங் நேய்களே ரா------இன்றைய நேயர் நேரத்தில் முதல் கடிதம் தமிழ்த் தென்றல் சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் 30 பள்ளிபட்டி பி ஆர் சுப்பிரமணியன் எழுதியது. இவர் ஆகஸ்ட் 7 அன்று 28 கருத்துக் கடிதங்களை அனுப்பியுள்ளார். இன்னும் அனுப்புவேன் என்கிறார். இந்தக் கடிதங்களில் ஜூலை, ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி விரிவாக கருத்துக்களை எழுதியுள்ளார். குறிப்பாக, சீன உணவு அரங்கத்தில் விச்சுவான் மாநில கோழி இறகு வறுவல் உணவு பற்றிக் குறிப்பிடுகிறார். தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வகை உணவுப்பழக்கம் உண்டு. சீனா முழுவதும் ஒரே பழக்கம் தான் என்று நினைத்தோம். அதை இந்த நிகழ்ச்சி மாற்றி விட்டது என்கிறார். மேலும், நிகழ்ச்சிகளில் பேச்சுத்தமிழ் இடம் பெறுவது கொச்சையாக இருக்கிறதே என்று சொல்லி நீண்ட கடிதம் எழுதியுருக்கிறார். எனக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். வி-----அப்படியா, ராஜா இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ரா-----இது பற்றி நான் ஒரு கருத்து சொல்லனும் ஏன்னென்றால் சேந்தமங்கலம் எஸ் எம் ரவிச்சந்திரனும் ஒரு நீண்ட கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார். வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வமும் தமது ஒரு மின்னஞ்சலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வானொலி ஒலிபரப்புக்கு நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் பல நுட்பங்கள் உள்ளன. பேச்சுமொழிப் பயன்பாடும் அவற்றில் ஒன்று, உரையாடல் பாங்கிக் நிகழ்ச்சிகளை அமைக்கும் போது பேச்சு மொழியைப் பயன்படுத்துவது தான் இயல்பாக இயற்கையாக இருக்கும். நிகழ்ச்சியில் சொல்லப்பட வேண்டிய கருத்தைப் பொறுத்து பேச்சு மொழி பயன்படுத்தப்படுகிறது. மேளும், பேச்சுமொழி என்பது வேறு, ஆங்கிலக் கலப்பு என்பது வேறு உங்கள் அனைவரையும் போலவே நானும் மொழிக் கலப்புக்கு முதல் எதிரி ஆனால் சில சமயங்களில் சுற்று வளைக்காமல் புரிய வைப்பதற்காக அனைவரும் அறிந்து ஓரிரு ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்துப்படுகின்றன. நேயர்களின் மன உணர்வுகளைப் பரிந்து கொண்டோம், நன்றி. வி------நேயர்களே. இப்போது நிலைமையை புரிந்து கொண்டீர்கலா, சரி ராஜா தொடர்ந்து கடிதங்களைப் பாராக்கலாம். ரா------30 பள்ளிப்பட்டியில் இருந்து எஸ் சதீஷ்குமார், எஸ் ஜெயந்தி, ஆர் லட்சுமி, ஆர் நல்லுசாமி, ஆசியோரும், ஜூலை ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதியுள்ளனர். சேந்தமங்கலம் எம் சிவானந்தன், ஜூன் திங்கள் நட்புப்பாலம் நிகழ்ச்சியில் இலங்கைப் மத்திரிகையாளர் முத்தையா அளித்த பேட்டியைப் பாராட்டியுள்ளார். மற்றொரு சேந்தமங்கலம் நேயர் எஸ், ராமச்சந்திரன் பெங்ஷீயி பற்றிய சீனப் பண்பாடு நிகழ்ச்சியையும் வேறு சில நிகழ்ச்சிகளையும் பாராட்டியுள்ளார். இணைய தளத்தில் சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளும், படங்களும் அருமையாக உள்ளன என்று பாராட்டுகிறார். ஈரோடு மாவட்டம் அணைத் தோட்டம் நேயர் அ ப கந்தசாமி, மதுரை மாவட்ட நேயர் மன்றம் தயைரித்த உங்கள் குரல் நிகழ்ச்சியில் பகளாயூர் நாச்சிமுத்து தெரிவித்த கருத்துக்களை, இவர் பாராட்டியுள்ளார். வி------நேயர்களின், பாராட்டுக்களுக்கு நன்றி.