திபெத்தியல் பரிமாற்ற நடவடிக்கை
cri
ஜெர்மணியில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற சீனத் திபெத்தியல் மற்றும் வாழும் புத்தர் பிரதிநிதிக் குழு அண்மையில் ஜெர்மன் திபெத்தியல் வட்டார நிபுணர்களுடன் கலந்துரையாடி சீனாவின் திபெத் இனப் பண்பாட்டு வரலாறு, வளர்ச்சி, பாதுகாப்பு, திபெத்தியல் ஆய்வு முதலிய பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை பரிமாறிக் கொண்டது.திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டது முதல் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தை பிரதிநிதிக் குழுவினர் விவரித்தனர். மத்திய அரசு திபெத்தின் பல்வேறு துறைகளுக்கு அளித்துள்ள ஆதரவையும் உதவியைவும் அவர்கள் புள்ளிவிவரங்களுடன் எடுத்துக் கூறினர். தன்னாட்சி பிரதேசத்தின் சுய நிர்ணயம், சுதந்திரமான மத நம்பிக்கை ஆகியவை திபெத்தில் செவ்வனே நடைமுறைப்படுத்தப்படுவகையும் அவர்கள் உதாரணங்களுடன் விளக்கினார்கள்.ஜெர்ம்ன் நிபுணர்களும் அறிஞர்களும் பொருளாதாரம், சமூகம் முதலிய துறைகளில் திபெத் தன்னாட்சி பிரதேசம் பெற்றுள்ள வளர்ச்சியை பாராட்டினர்.
|
|