இவ்வாண்டு சீனாவில் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை 12.8 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். இது பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுவாகத் தூண்டுகிறது என்று சீன வணிக அமைச்சகம் இன்று வெளியிட்ட சந்தை பற்றிய மதிப்பீடு கூறுகின்றது. இவ்வாண்டு முதல், சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்த சீர்திருத்தம் என்ற குறிக்கோளை நோக்கி வளர்ச்சியடைந்து வருகின்றது. வணிகப் பொருள் சந்தையும் நுகர்வு தேவையும் சீராக வளர்ந்துள்ளன. முதல் ஒன்பது திங்களில், நாடு முழுவதிலும் சமூக நுகர்வு பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது.
|