• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-31 16:38:42    
கொலையாளி யார் 3

cri
துப்பறியும் வோங் மனசுக்குள் ஏதேதோ கணக்குப் போட்டுப் பார்த்தார். செத்துப் போனவளோட ஜீவநாடி உலோகம் செத்துப் போன நாளான இன்று நெருப்பு சக்தி நிறைய இருக்கு. ஆக, உலோகத்துக்கு நெருப்பு எமன். அதாவது, சாகறதுக்கு முன்னாடி ஏதோ பெரிசா சண்டை போட்டுருக்கா. தோத்துட்டா. இந்த மக்களுக்கு என்ன ஆச்சு? ஏன் பெங்ஷுயி பத்தி தெரிஞ்சுக்கிட மாட்டேங்கிறாங்க. வோங்கிற்கு புரியவில்லை.

பெருஞ்சுவரில் மாடத்தில் நான்கு அறைகள். நான்கு சந்தேகத்திற்குரிய புள்ளிகள். நாலுபேருக்கும் பெயர் பொருத்தம்—தலைமயிர் பொருத்தம். "சரி, சரளா கீழே விழுந்த நேரத்துல வடக்கு அறையில் யார் இருந்தது?" வோங் கேட்டார்.

"அதைத்தானே நாம கண்டுபிடிக்கணும்" என்று சலித்துக்கொண்டார் போலிஸ் அதிகாரி.

"அது யாருன்னு தெரிஞ்சா கொலையாளியை கண்டுபிடிச்சறலாம். இல்லியா?"

"என்ன இந்தாளு" என்று முனங்கிய படியே, "உங்களை வரவழைச்சது அதுக்குத்தானே" என்றார் போலீஸ்காரர். "நாலு பேருமே தனித்தனியா இருந்ததா சொல்றாங்க. இந்த அறைகளுக்குள்ளே தனித்தனியா போய் வந்ததா சொல்றாங்க."

"ஆக, யாரோ ஒருத்தர் சொல்றது டோய். சரி, சாட்சிகள் யாராச்சும் இருக்காங்களா?"

"தூரத்துல இருந்து பார்த்த 6 சாட்சிகள். அதனால எதையும் சொல்ல முடியவே. சரளா தள்ளிக் கொல்லப்பட்ட வடக்கு மாடத்தில் இருந்தது யாருன்னு யாரும் சொல்லலை."

பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் வாக்கு மூலங்களை வோங் வாசித்தார்—மனசுக்குள்ளாக. கூட்டிக் கழித்துப் பெருக்கியதில் இந்த முடிவுக்கு வந்தார்.

தெற்கு அறையின் ஜன்னிலில் தெரிந்த முகம் பெண்ணினுடையது அல்ல. மேற்கு ஜன்னலில் தெரிந்த முகம் ஆணுடையது அல்ல. கிழக்கு ஜன்னலில் தெரிந்த முகம் வெள்ளைச் சாமியினுடையது அல்ல. தெற்கு ஜன்னலில் இருந்தது கருப்பசாமி அல்ல. கிழக்கு ஜன்னலில் தெரிந்த முகம் ஆணினுடையது. மேற்கு ஜன்னலில் தெரிந்த முகத்திற்கு நரைத்த தலைமுடி இருந்தது.

நான்கு அறைகள்—நான்கு ஆட்கள். சாட்சியங்களையும், அடிப்படை உண்மைகளையும் ஒப்பிட்ட பிறகு, சளசள சரளாவைக் கொன்றது யார் என்று கண்டுபிடித்தார் துப்பறியும் வோங். எப்படி?

ஒவ்வொரு சாட்சியமாக கழித்துப்பார்த்ததில் தெற்கு அறையில் இருந்தது ஆண். ஆனால் கருப்பசாமி அல்ல. ஆகவே வெள்ளைச்சாமியாகத்தான் இருக்கணும். கிழக்கு ஜன்னலில் தெரிந்த முகம் ஆணினுடையது. அது கருப்பசாமிதான். மேற்கு ஜன்னலில் தெரிந்த முகம் கருகருவென தலைமுடி கொண்ட ஒரு பெண்—அது கருப்பாயிதான். ஆக, வடக்கு ஜன்னலில் இருந்தது வெள்ளையம்மாள். அவள்தான் சளசள சரளாவை கொன்றவள்.