• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-01 19:48:15    
டென்னிஸ் வீரர் கிரிஸ்டேல்ஸ்

cri

அக்டோபர் 29ஆம் நாள் பெல்ஜியத்தின் ஹசால்ட் நகரில் நடைபெற்ற மகளிருக்கான அனைத்து பிரான்ஸ் நட்சத்திர டென்னிஸ் ஒப்பன் போட்டியில், பெல்ஜியத்தின் புகழ் பெற்ற வீராங்கனை கிரிஸ்டேல்ஸ் 2-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் வீராங்கனை சாபென்னாவைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இவ்வாண்டு WTA போட்டியின் இறுதிப் போட்டியில் அவர் நுழைவது இது 9வது தடவையாகும். முதல் 8 போட்டிகளிலும் அவர் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார்.

29ஆம் நாள் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கிரிஸ்டேல்ஸ் தமது திறமையை உச்சிநிலையில் வெளிப்படுத்தினார். 19 வயதான எதிராளிக்கு சிறிது வாய்ப்பை கூட அவர் வழங்கவில்லை. போட்டி துவங்கியதும் அவர் வலுவான தாக்குதல் நடத்தினார். முழு போட்டியும் 54 நிமிடம் மட்டும் நீடித்தது.

கிரிஸ்டேல்ஸ் இவ்வாண்டு பிப்ரவரி திங்களில் குணமடைந்து விளையாட்டு அரங்கத்துக்கு திரும்பியது முதல், மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றார். அமெரிக்க டென்னிஸ் போட்டி உள்ளிட்ட எட்டு போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். உலக பெயர் வரிசையில் அவர் நூற்றுக்கு பிந்திய இடத்திலிருந்து தற்போதைய இரண்டாம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

இந்த முறை அவர் மேலும் சாம்பியன் பட்டம் பெற்றால், அவரது டென்னிஸ் வாழ்க்கையில் பெறப்பட்ட 30வது WTA சாம்பியன் பட்டமாகும். ஒரே போட்டிப் பருவத்தில் 9 சாம்பியன் பட்டங்களை பெறுவதென்ற குறிக்கோளை அவர் இரண்டாம் முறையாக நனவாக்குவார். 2003ஆம் ஆண்டு 20 வயது மட்டும் இருந்த அவர் வெல்லப்பட முடியாதவாறு ஒரே ஆண்டில் 9 போட்டிகளில் சாம்பியன்களை பெற்றிருந்தார். அவ்வாண்டு ஆகஸ்ட் திங்களில் அவர் WTA பெயர் வரிசையில் முதலிடம் பெற்றிருந்தார்.

30ஆம் நாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் இத்தாலியின் ஸ்கியாவோநெயுடன் மோதினார். 25வயதான ஸ்கியாவோநெய் 29ஆம் நாள் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் இளம் வீராங்கனை கிராயிசெக்கைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். தற்போது ஸ்கியாவோநெய் உலக பெயர் வரிசையில் 15வது இடத்தில் உள்ளார். அவர் கிரிஸ்டேல்ஸுடன் இறுதிப் போட்டிகளில் 7 முறையாக சந்தித்தார். ஆனால் ஒரு முறைகூட அவர் வெற்றி பெறவில்லை.