• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-03 11:27:52    
சீன அணியின் முதலாவது தங்கப் பதக்கம்

cri

நான்காவது கிழக்காசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான 3 மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பில் சீன அணி வலுவான வீரர்களை அனுப்பவில்லை என்ற போதிலும், சீன வீரர் லோ யூ துங் இந்த நிகழ்ச்சியில் சீனாவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார். அவருடைய அணி தோழர் பான் சௌ வெய் வெள்ளி பதக்கத்தை வென்றார். ஜப்பானிய வீரர் ஒருவரு மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கிடையிலான இடைவெளி மிகவும் தெளிவானது, சீன நீர் குதிப்பு அணி, கனவு அணி என்ற கௌரவத்துக்கு பொருத்தமானது. போட்டி துவங்கியது முதல் இறுதிவரை சீன வீரர்கள் முதல் இரண்டு இடங்கள் வகித்தனர். அடிப்படையில் தவறிழைக்கவில்லை. ஜப்பானிய அணியின் வீரர்கள் மூன்றாவது, நான்காவது இடங்களை பிடித்தனர். அவர்கள் பெரிய தவறுகளை இழைக்கவில்லை ஆனால் சிறிய தவறுகள் இடைவிடாமல் நிகழ்ந்தன.

தென் கொரிய வீரர்களோ, அவர்கள் ஓய்வு நேர வீரர்கள் போல பெரிய தவறுகளை அதிகமாக இழைத்தனர், மொத்து ஆறுமுறை குதிப்புகளில் பெருமாபாலான குதிப்புகள் தோல்வி கண்டன. இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த மகௌவின் வீரர்கள் "போட்டிகளில் பங்கு கொள்வது முக்கியம், போட்டிகளில் அனுபவிப்பது" என்ற சிறப்பியல்பை வெளிப்படுத்தினர். அவர்கள் நிறைவேற்றிய செயல்பாடுகள் அவ்வளவு கஷ்டமில்லை. அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்தப் போட்டியின் தரம் அவ்வளவு உயரமில்லை. எனது தரத்தை முழுமையாக வெளிப்படுத்தினால் போதும், சாம்பியன் பட்டம் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இப்பொழுது சீனத் தேசிய அணியின் உறுப்பினர் அல்ல. வெகுவிரைவில் தேசிய அணியில் சேர்வது எனது குறிக்கோளாகும். அதன் பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் தாய்நாட்டின் பெருமைக்காக பாடுபடுவேன் என்று போட்டிக்கு பின் லோ யூ துங் கூறினார்.

நவம்பர் முதல் நாள் நடைபெற்ற ஆடவருக்கான ஒரு மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பிலும் அவர் சாம்பியன் பட்டம் பெற்றார்.