• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-02 08:30:53    
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 10வது கிரகம் படுத்தும்பாடு

cri

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 10வது கிரகம், இந்திய ஜோதிடர்களை படாதபாடு படுத்தி வருகின்றது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் நிதி உதவியுடன் மைக் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழவினர் 10வது புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் கடந்த ஜுலை 29ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தை விட 97 மடங்கு தூரத்தில் உள்ள இந்த கிரகம், புளூட்டோ கிரகத்தை விட மிகப் பெரியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய 10வது கிரகத்துக்கு செட்னா என்று இப்போது பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.

நீல நிறத்தில் நண்டு

அமெரிக்க நீனவர்கள் நீலநிற நண்டு களைப்பிடித்து உள்ளனர். ஐந்பது லட்சம் உயிரினங்களில் ஒன்றில் காணப்படும் ஒருவித வித்தியாசமான மரபணு தான் இந்த வித்தியாசமான நிறததுக்கு காரணம் எந்று கூறப்படுகின்றது.

இந்த நீலநிற நண்டு ரோடி தீவில் உள்ள பிரிஸ்டால் நகரில் பொதுமக்கள் காண்பதற்காக வைக்கப்பட்டது. இந்த நீலநிற நண்டு பலரைக் கவர்ந்து உள்ளது.

இருதயத்தில் பாய்ந்த ஆணி

இங்கிலாந்தில் லைசெஸ்டர் நகரைச் சேர்ந்தவர் நைஜல் கிர்த். இவர் தன் வீட்டின் குளியல் அறியில் தரைக்கு பலகை போட்டார். மரத்தாலான தரைக்கு, இயந்திரம் மூலம் ஆணி அடித்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். இயந்திரம் அடித்த ஆணி அவரது இருதரத்தில் பாய்ந்தது. உடனே அவர் 999 நம்பருக்கு டெலிபோன் செய்தி அவசர உதவியைக் கேட்டார். அதன் பிறகு அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ஆபரேஷன் செய்து இறுதயத்தில் இருந்த ஆணி அகற்றப்பட்டது.

இருதயத்தில் பாய்ந்த ஆணியை நைஜல் கையால் அகற்றி இருந்தால் ரத்தம் பீரிட்டுப்பாய இறந்துப் போய் இருப்பார் என்று டாகடர்கள் கூறினர்.

ஆணி இருதயத்தில் ஊடுருவி இருந்தாலும் முக்கியமான ரத்தக் குழாய்களில் பாயாமல் விட்டதால்தான் அவர் உயிர் பிழைக்க முடிந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.