• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-31 16:41:19    
குழந்தைகளுக்கு இனப சூழல் உருவாக்குவது

cri

14 வயது Zhang Li Zheng வீட்டை விட்டு ஓடிப் போனதற்குக் காரணம் தந்தையின் கொடுமை. இரண்டு தடவை வீட்டை விட்டு ஓடிப்போனான். இரண்டாவது தடவை தெருக்களில் திரிந்த போதுதான் அநாதைக் குழந்தைகள் மீட்பு மையத்தின் பார்வையில் பட்டான். 8 முதல் 15 வயது வரையிலான ஏழாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இந்த மையம் தஞ்சம் அளித்துள்ளது. குழந்தைகள் அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு என்ற காரணம். வறுமை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அவர்களுக்குக் குடும்பம் என்ற உணர்வு உள்ளத்தில் ஏற்படவில்லை. அப்படி ஒரு உணர்வும் ஈடுபாடும் தோன்றி விட்டால், அவர்கள் குடும்பத்தோடு ஒட்டிக் கொள்வார்கள். எனவே குடும்பச்சூழலை ஏற்படுத்தித் தருவதற்காக 4 போலிக்குடும்பங்களை இந்த மையம் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் இது வரை 75 அநாதைக் குழந்தைகள் தங்கியிருந்து, பெற்றோரின் அன்பும் ஆதரவும் எப்படி இருக்கும் என்பதை அனுபவித்து உணர்ந்து, மனந்திருந்திய மைந்தனாக வீடுதிரும்பியுள்ளனர்.

போலிக் குடும்பங்களை ஏற்பாடு செய்வதற்கு, அன்பும் பொறுமையும், முடிந்தால் ஆசிரியப் பணியில் அனுபவமும் மிக்க பெற்றோர்களாக இந்த மையம் தேடுகிறது. அவர்கள் விடா முயற்சியுடன் குழந்தைகளின் சேட்டைகளுக்கு எல்லாம் ஈடு கொடுத்து, பேசிப்பழகி, முதல்படியாக அவர்களின் நம்பிக்கையை வெல்கின்றனர். நீங்கள் உண்மையிலேயே பரிவு காட்டுகிறீர்கள். உங்களுடைய அன்பு போலியல்ல என்பதை அநாதைக்குழந்தைகள் நம்பத் தொடங்கி விட்டால், நீங்கள் சொல்வதைக் கேட்டு, கெட்ட பழக்கங்களைக் கைவிடுகிறார்கள் என்று ஒரு போலித் தந்தையான 31 வயது லு கூறுகிறார். அவர்களுடைய பெற்றோர் போலவே இந்தப் போலி பெற்றோர்களும் அநாதைக் குழந்தைகளுக்கு உணவு சமைத்துப் பரிமாறுகிறார்கள்; உடைகளை வாங்கித் தருகிறார்கள். கல்வி கற்க உதவுகின்றனர். எப்போதாவது உல்லாசமாக பூங்காங்களுக்கும் அழைத்து செல்கின்றனர். இந்தச் செலவுகளை எல்லாம் ஈடுகட்ட ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்துக்கு 600 யுவானை மையம் வழங்குகிறது.

ஆனால் பணத்துக்காக பெற்றோராக நடிக்கவில்லை. இந்தக் குழந்தைகள் என்னோடு ஒட்டி உறவாடி, அன்போடு ஒரு வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தாலே போதும் அதுவே எனக்கு மிகப் பெரிய பரிசு என்கிறார் லு.