• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-01 22:25:00    
பைத்தியமாக்கும் மூளைப்பருப்பு

cri
எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளை தான்

மண்ணில் பிறக்கையிலே.

அவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும்

அன்னை வளர்க்கையிலே என்று கூறுகிறது ஒரு பிரபலமான திரைப்பாடல்

ஒரு குழந்தையின் வாழும் சூழ்நிலையும் வளர்ப்பு முறையும் தான் அதனுடைய பழக்க வழக்கங்களைத் தீர்மானிக்கிறதா? இது பற்றி ஆராய்ந்த அமெரிக்காவின் தேசிய மனநலக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு மனிதனின் பழக்கவழக்கங்களைத் தீர்மானிப்பது மரபணுக்கள் தான் என்று முடிவுகட்டியுள்ளனர். வில்லியமஸ் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு அழர்வமான மரபணு மாற்றம் உள்ள மூளையை உடைய மனிதர்கள், சமூக நிகழ்வுகளின் போது அசாதாரணமாகச் செயல்படுவார்கள். ஏறுக்கு மாறாக நடந்து கொள்வார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சமூகத்தில் பழகுவது என்பது மனிதர்களின் அனுபவத்துடனும் அவர்களின் நலனுடனும் தொடர்புடையது. மனநலன் கெடும் போது—அதாவது பைத்தியம் என்ற நிலைக்கு வரும் போது, இந்தப் பழக்கவழக்கங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன என்று, அமெரிக்க தேசிய மனநலக்கழக இயக்குநர் தாமஸ் இன்செல் கூறுகிறார்.மரபணுக் கோளாறினால் மூளையின் பாதையில் செயல்பாட்டுக் கோளாறுகள் ஏற்பட்டு, அசாதாரணமான பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றனவா என்ற முதலாவது ஆய்வாக இது இருக்கக் கூடும்.

ஆய்வுக்கு உட்படுவதற்காக விரும்பி முன்வந்த ஆரோக்கியமான தொண்டர்களின் மூளையுடன் வில்லியமஸ் சிண்டரோமினால் பாதிக்கப்பட்டவார்களின் மூளையை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு ஆராய்ந்தனர்.

சமூகப் பழக்க வழக்கங்களை நிர்ணயிக்கும் மூளைத் தொடரமைப்பையும், சுற்றுச்செயல்பாட்டையும் கண்டறிந்து, இந்த இருவகைப்பட்டவர்களின் செயல்பாட்டில் உள்ள வித்தியாசத்தைக் காண்பது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும்.

வில்லியமஸ் சிண்டரோம் என்னும் மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் 7 குரோமோசோமில் சுமார் 21 மரபணுக்களைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பற்றாக்குறையால்தான், சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவது என்று அவர்களால் தீர்மானிக்க முடியாமல் போகிறது. இப்படிப்பட்டவர்கள் முற்றிலும் புதிய மனிதர்களிடம் ஏதோ வெகு நாள் பழகியவர்கள் போல பேசத் தொடங்குவார்கள். அளவுக்கு அதிகமாக நட்பு பாராட்டுவார்கள். மிகவும் பயப்பட வேண்டிய தேவையே இல்லாத போது, பயந்து போய், பரபரப்பாக செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உயரத்தைக் கண்டால் பயம், சிலந்தியைக் கண்டால் பயம் என்று சின்னச் சின்ன விடியங்களுக்கு எல்லாம் பயப்படுவார்கள்.