• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-02 16:30:24    
தமிழ் மூலம் சீனம் பாடம் 37

cri
கடந்த இரண்டும் முறைகளில் நாம் படித்த உரையாடல்கள், நண்பர் அல்லது குடும்பத்தினரை வழியனுப்பி பிரியாவிடை வழங்கும் போது பயன்படுத்தப்படுகின்றன. கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றன. இன்று, நாம் புதிய பாடத்தை படிக்காமல் இந்த உரையாடல்களை மீண்டும் பார்க்கின்றோம்.

முதலில் முதலாவது உரையாடலை பார்ப்போம்.

நீங்கள் தமிழ் மூலம் சீனம் என்ற நூலை திறந்து, 21ஆம் பக்கத்திலுள்ள உரையாடல் 2 பாருங்கள்.

ZAI JIAN, YI LU SHUN FENG!

ZAI JIAN, XIE XIE NIN LAI SONG WO!

உங்கள் நண்பர் பயணம் செய்ய வேறு ஒரு இடத்துக்குப் புறப்பட உள்ளார். நீங்கள் அவரை வழியனுப்பும் போது, இந்த உரையாடலை பயன்படுத்தலாம்.

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தை வழங்குகின்றோம்.

ZAI JIAN, YI LU SHUN FENG!

வணக்கம், பயணம் சிறப்பாக அமையட்டும்!

ZAI JIAN, XIE XIE NIN LAI SONG WO!

வணக்கம், என்னை வழியனுப்ப வந்த உங்களுக்கு நன்றி!

இப்பொழுது இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்

ZAI JIAN, YI LU SHUN FENG!

ZAI JIAN, XIE XIE NIN LAI SONG WO!

இப்பொழுது இன்றைய இரண்டாம் உரையாடலை பார்ப்போம்.

பாடநூலின் 21ஆம் பக்கத்திலுள்ள உரையாடல் 3 பார்க்கின்றோம்.

ZAI JIAN, ZHU NIN LU TU YU KUAI!

XIE XIE, NIN DUO BAO ZHONG!

நீங்கள் நண்பரை வழியனுப்பி, பிரியாவிடை பெறும் போது, ZAI JIAN,ZHU NIN LU TU YU KUAI!என்று நண்பரிடம் சொல்லலாம். நண்பர் பதிலளிக்கும் போது, XIE XIE, NIN DUO BAO ZHONG!என்று அவர் சொல்லலாம்.

ZHU NIN LU TU YU KUAI என்ற வாக்கியத்திலுள்ள ZHU என்றால், வாழ்த்துவது என்பது பொருள். LU TU என்றால், பாயணத்தின் போது, அல்லது பயணத்தின் போக்கில் என்பது பொருள்.YU KUAI என்றால், மகிழ்ச்சி என்பது பொருள்.

NIN DUO BAO ZHONG! என்ற வாக்கியத்திலுள்ள BAO ZHONG என்றால், உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்பது பொருள்.

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தை வழங்குகின்றோம்.

ZAI JIAN, ZHU NIN LU TU YU KUAI!

வணக்கம், மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்ளுங்கள்.

XIE XIE, NIN DUO BAO ZHONG!

நன்றி, நலமாக இருங்கள்.

நேயர்களே, இன்று இந்த உரையாடல்களை மீண்டும் படித்திருக்கின்றோம். பாடத்துக்குப் பின், கண்டிப்பாக பயிற்சி செய்யுங்கள். இருவர் மாறிமாறி பரஸ்பரம் பயிற்சி செய்யலாம். முன்னர் படித்த சொற்களையும் இணைத்து, நீங்கள் சொந்தமாக ஒரு உரையாடலை தயாரித்து பயிற்சி செய்யுங்கள். போக போக பழைய புதிய சொற்களை அனைத்தும் கிரகித்துக் கொள்ளலாம்.