சீன திபெத்தியல் அறிஞர்கள் மற்றும் வாழும் புத்தர்களின் பிரெஞ்சு பயணம்
cri
 பிரான்சில் பயணம் மேற்கொண்டிருக்கும் சீன திபெத்தியல் அறிஞர்கள் மற்றும் வாழும் புத்தர்களின் பிரதிநிதிக்குழுவினர் நேற்று பாரிஸில் பிரெஞ்சு மதம், அரசியல் மற்றும் கல்வித்துறை பிரமுகர்களைச் சந்தித்து, திபெத்தின் வளர்ச்சி, திபெத் மதம் திபெத் பாரம்பரிய பண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பிரதிநிதிக்குழுத் தலைவரும், திபெத் சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இன ஆய்வகத்தின் தலைவர் Basang Wangduiஉம், பிரதிநிதிக்குழுவின் உறுப்பினரான வாழும் புத்தர் Danzeng Quzhaஉம், பாரிஸ் சர்வதேச புத்த கல்லூரியின் பொறுப்பாளர் ஒருவரைச் சந்தித்த போது, திபெத்தின் மத நிலைமை, திபெத் புத்த மதத்தின் ஊற்றுமூலம், வளர்ச்சி மற்றும் சிறப்புத்தன்மை, திபெத்தில் மத சுதந்திரத்தையும், பாரம்பரிய பண்பாட்டையும் சீனா அரசு பாதுகாக்கும் கொள்கை ஆகியவற்றை பற்றி விவரித்தனர். பாரிஸ் சர்வதேச புத்த கல்லூரியின் பொறுப்பாளர் இதற்கு பாராட்டுத் தெரிவித்தார். இரு நாட்டு புத்த மத தலைவர்களிடையே மேலும் தொடர்பை வலுப்படுத்தி, திபெத்தின் மத நிலைமையை வெளியுலகு மேலும் நன்கு புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்.
|
|