• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-04 20:19:35    
ஹுவாங்யியானும் அவருடைய ஓவிய கூடம்

cri

ஓவியக் கூடத்தைத் திறக்கும் கருத்தை வெளியிட்டதும், நண்பர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். தற்போது, கலைப்பொருள் சந்தை சீனாவில் புதிய துறையாக இருக்கிறது. ஓவியக் கூடம், இந்தச் சந்தையில் மிகவும் புதியது. அதன் வளர்ச்சி வரலாறு, 20 ஆண்டுகள் தான். இதில் பல சிறந்த ஓவியக் கூட்டங்களுக்கு வெளிநாட்டவர்கள் தலைமை தாங்கியுள்ளனர். ஹுவாங் யியான், ஒரு சிறந்த ஓவிய கூடத்தை நிர்வகிக்க வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். அவர் மேலும் கூறியதாவது:

கலைப்பொருள் சந்தைக்கு உள்நாட்டில் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. பெய்ஜிங்கில் ஒவ்வொரு திங்களும் ஒரு புதிய ஓவிய கூடம் திறக்கப்பட்டு, பழைய ஓவியக் கூடம் மூடப்படுகிறது. இந்தத்துறை மிகவும் கஷ்டமாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். ஆனால், நான் உணர்வுடன் உண்மையான நிகழ்ச்சியை செய்ய விரும்புகின்றேன் என்றார் அவர்.

கலை மற்றும் வடிவமைப்பில் பெருமளவு சீரான மூலவளத்தைப் பயன்படுத்தி, கலை மீது அன்பு கொண்டதால், ஹுவாங் யியான் இந்த ஓவியக் கூடத்தைத் திறந்தார். இதற்கு சான் தான் என்ற பெயரிட்டார். பழைய சீன மொழியில் சான் தான் என்பதற்கு, சீனா என்ற பொருளாகும். மக்கள் இந்தப்பெயரைக் காணும் போது, இதோ ஒரு சீன ஓவியக் கூடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விளக்கிக்கூறினார். இந்த ஓவியக் கூடம் சீன நவீனக் கலையைப் பிரதிபலிப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். சீன நவீன கலையில் மிகவும் சிறப்பான முதிர்ந்த பகுதியை, கலாரசிகர்களிடம் அறிமுகப்படுத்திட அவர் விரும்பினார்.

கலைஞர் தேர்வுக்கான ஹுவாங்யியானின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை. இந்த ஓவியர்கள் பழுத்த ஓவிய நுட்பத்தையும், புதுமைக் கருத்துக்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கோரினார். இதற்காக அவர் நீண்டகாலமாக தேடினார். அவரைச் சந்திக்க வந்த பல ஓவியர்களை அவர் மறுத்தார். தமது நோக்கில் உயர் தரமான ஓவியர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஊன்றிநிற்கின்றார். இதனால், சான் தான் ஓவியக் கூடத்தில் நடைபெற்ற ஓவியக்காட்சிகள், பாராட்டுக்கள் பெற்றுள்ளன.

எமது செய்தியாளரிடம் பேசிய ஹுவாங்யியான், ஒரு நல்ல ஓவியக் கூடத்தை நிர்வகிப்பது மிகவும் கடினம். ஆனால் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். இந்த ஓவியக் கூடம், நூற்று ஆண்டின் கடையாக மாற்றுவது என்பது அவருடைய குறிக்கோளாகும் என்றார். அவர் மேலும் கூறியதாவது:

இதை, அடுத்த பல ஆண்டுகளில் என்னுடைய லட்சியமாக கொண்டு மெதுவாக செய்து வருகின்றேன். நான் ஓய்வு பெற்ற பிறகு, எனது மகள் அல்லது வேறு ஒருவர் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று தாம் விரும்புவதாக கூறினார்.