கலை—வணக்கம் நேயர்களே. சுவையான சீன உணவு அருந்த தயாராகக் காத்திருக்கும் உங்களை, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சிக்கு வரவேற்பது கலைமகள்.
ராஜாராம்—வணக்கம் நேயர்களே. உங்களோடு சேர்ந்து சீன உணவுவகைகளை சுவைக்க ஆர்வமாகக் காத்திருப்பது ராஜாராம். கலைமகள், இன்றைக்கு என்ன உணவுவகை அறிமுகப்படுத்தப் போறீங்க?
கலை—இன்றைக்கு, இரண்டு சைவ உணவுகளை சொல்வேன். இரண்டுமே, ஊறு காய்கள்.
ராஜாராம்—என்ன ஊறுகாயா?கேட்டதுமே நாவில் நீர் ஊறுது. இது தொடர்பா ஒருபாட்டு இருக்கு தெரியுமா?
கலை—நீங்க பாடுவீங்களா?
ராஜாராம்—நான் பாடினால் யார் கேட்பது. பாடல் வரி சொல்வேன். "உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயை பார்த்தானாம்.
உதட்டாலே சப்புக்கொட்டி கஞ்சித் தொட்டியில் விழுந்தானாம்".
இது, பழைய சினிமாப்பாட்டு.
கலைமகள்—சீனாவிலும் கஞ்சி குடிப்பதற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வாங்க. சரி, என்னென்ன பொருட்கள் தேவை என்று கடந்த முறை சொன்னோம். எடுத்துவைத்திருக்கிறீர்களா?
கலைமகள்—ஆமாம். ஆனாலும் திரும்பவும் சொல்லட்டுமா?
ராஜாராம்—நிலக்கடலை, வெள்ளரிக்காய், கொஞ்சம் வெண்ணெய், உப்பு, மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூண்டு முதலியவற்றை எடுத்துவைத்திருக்கிறேன். கலைமகள், இனி, தயாரிப்பு முறை சொல்லுங்கள்.
கலைமகள்—சரி, முதலில், நிலக்கடலை ஊறு காய் தயாரிப்போம். நிலக்கடலையை நன்றாக சுத்தம் செய்து, வென்னீரில் போட வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு, வென்னீரிலிருந்து நிலக்கடலையை எடுத்து, வாணலியில் போட்டு, தண்ணீர், உப்பு, இஞ்சி, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில் சுமார் 45 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
ராஜாராம்—அப்பறம்?
கலைமகள்—அப்பறமா? அவ்வளவுதான் நிலக்கடலை ஊறுகாய் தயார். இதை சூப் குடிக்கும் போது அதில் கலக்கலாம். சீன மக்களின் வழக்கத்தின் படி, காலையில், கஞ்சியுடன் இந்த ஊறுகாயை கலந்து தின்னும் போது கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும்.
ராஜாராம்—அப்படியா!நான் வீட்டில் தயாரித்து சாப்பிடுவேன்.
கலைமகள்—ராஜா, நீங்கள் சுவையுங்கள். கண்டிப்பாக பிடிக்கும்.
|