சீன திபெத் இயல்நிபுணர் குழுவின் பயணம்
cri
சீன திபெத் இயல் நிபுணர்கள் மற்றும் வாழும் புத்தர் பிரதிநிதிக் குழுவின் தற்போதைய பிரிட்டிஷ், ஜெர்மன், பிரேஞ்சு பயணம், திபெத்தின் உண்மை நிலைமையை இம்மூன்று நாட்டு மக்களுக்கும், கல்வியியல் துறையினருக்கும் நன்கு புரிய வைத்துள்ளது. இந்த நாடுகளின் திபெத் இயல் துறைக்கும் சீன திபெத் இயல் துறைக்குமிடையில் தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தியுள்ளது என்று இப்பிரதிநிதிக்குழுவின் தலைவர் Pasang Wangdu கூறியுள்ளார்.
நேற்று பாரிஸில் பேசிய அவர், தேசிய இன தன்னாட்சியும் மத சுதந்திரமும் திபெத்தில் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. திபெத் வழி புத்த மதமும், திபெத்தின் நவீன பொருளாதார சமூக வளர்ச்சியும் ஒருங்கிணைத்து வளர்ச்சியடைகின்றன என்று கூறினார். திபெத் பற்றி மேலை சமூகத்தின் தப்பெண்ணத்தைப் போக்கவும், புரிந்துணர்வை அதிகரிக்கவும் இப்பயணம் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
|
|