• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-08 09:16:02    
விளையாட்டுத் துறையில் மூன்று வலுவான நாடுகள்

cri

நான்காவது கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் நடைபெற்றது. முந்தைய மூன்று முறை விளையாட்டுப் போட்டிகள் போல, இந்த முறையும், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களை வகித்தன. இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான போட்டாப்போட்டி, ஆசிய விளையாட்டுத் துறையின் உச்ச நிலையைப் பிரதிபலித்தது.

இந்த மூன்று நாடுகளும் கிழக்காசியா மற்றும் முழு ஆசியாவின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை தூண்டக்கூடிய முக்கிய ஆற்றலாக விளங்குகின்றன. விளையாட்டுத் துறையில் வலுவான நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா கலந்துகொள்வதால், கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆசிய விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்துவது உறுதி என்று கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில் மகௌவின் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அமைப்புக் கமிட்டித் தலைவர் சியோ வெய் லி கூறினார். அவர் கூறியதாவது:—

ஆசிய விளையாட்டுத் துறையின் மிகவும் வலுவான அணிகள் எல்லாம் கிழக்காசியாவில் இருக்கின்றன. 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன், மகௌவில் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது, சீன, ஜப்பானிய மற்றும் தென் கொரிய விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பயிற்சி போல அமைந்துவிட்டது. கிழக்காசியாவின் மிக சிறந்த விளையாட்டு வீரர்களான இந்த மூன்று நாடுகளின் வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் உலகின் தனிப்பட்ட விளையாட்டுப் போட்டியிலும் மிக சிறந்த சாதனைகளை புரிந்துள்ளனர்.

அவர்கள் கிழக்காசிய விளையாட்டுப் போட்டித் தளங்களில் மேலும் கூடுதலான விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும் உதவியும் அளிப்பது இயல்பே. அவர்களும் எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்ள தகுதியை பெறலாம் என்றார் அவர்.

மூன்று வலுவான நாடுகளில், ஆற்றல் மிக்க சீனா எப்பொழுதும் முன்னணியில் இருந்துவருகின்றது. முதல் மூன்று கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சீனா முதலிடம் வகித்ததோடு, 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 32 தங்கப் பதக்கங்களைப் பெற்று அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது.

இந்த முறை கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா 394 விளையாட்டு வீரர்களை அனுப்பி 16 விளையாட்டுகளில் போட்டியிட்டது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லியூ சியாங், மகளிருக்கான பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியின் சாம்பியனான சிங் ஹுய் நா, மகளிருக்கான 3 மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பு சாம்பியன் கோ ஜிங் ஜிங் உள்ளட்ட 11 ஒலிம்பிக் சாம்பியன்கள் போட்டிகளில் கலந்துகொண்டது மகௌ மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.