• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-10 14:12:40    
விளையாட்டுத் துறையில் வலுவான மூன்று நாடுகள்

cri

இந்த கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சீனா மிக முக்கியத்துவம் அளிப்பதை தென் கொரிய மற்றும் ஜப்பானிய பிரதிநிதிக் குழுக்கள் நேரில் கண்டன. தென் கொரியப் பிரதிநிதிக் குழுத் தலைவர் லீ சுங் கோக் கூறியதாவது: தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் ஆசியாவின் விளையாட்டுத் துறையில் மிக வலுவான நாடுகள். குறிப்பாக, சீன விளையாட்டு வீரர்கள் 130 கோடி மக்களிடையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். விளையாட்டு வளர்ச்சி மூலம் நாட்டின் தகுநிலையை உயத்துவதில் சீனா மிகவும் கவனம் செலுத்துகின்றது.

அதே வேளையில் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பெய்சிங் மாநகரில் நடத்தப்படுவதால், உலக விளையாட்டுத் துறையில் வலுவான நாடாக மாற சீனா மேலும் ஆசைப்படுகின்றது. எனவே, சீன வீரர்கள் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் அரசாங்கத்தின் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளனர். தவிரவும், விளையாட்டு துறை, போட்டிகள் மூலம் வளர்ச்சியடைகின்றது.

போட்டி இல்லாவிட்டால், வளர்ச்சியும் இல்லை. தென் கொரியா மற்றும் ஜப்பானின் தலைசிறந்த வீரர்கள் சீன விளையாட்டு வீரர்களுடன் போட்டியிடுவதால், சீன விளையாட்டு வீரர்கள் மேலும் வேகம், மேலும் உயரம், மேலும் வலிமை என்ற திசையை நோக்கி இடைவிடாமல் முன்னேறிவருகிறார்கள் என்றார் அவர்.

2006ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு தயார் செய்யும் வகையில் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் பல இளம் விரர்களையும் வீராங்கனைகளையும் அனுப்பியுள்ளன. சீனாவின் ஆடவர் கால்பந்து அணி, ஆடவர் மற்றும் மகளிர் கூடைப் பந்து அணிகள் ஆகியவை தேசிய இளைஞர் அணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற ஆடவர் கால்பந்து அணியை ஜப்பான் இந்த கிழக்காசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பியது. தென் கொரியாவின் ஆடவர் கால்பந்து அணியும் ஆடவர் கூடைப் பந்து அணியும் பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு வீரர்களை முக்கியமாக கொண்டவை. ஜப்பானிய பிரதிநிதிக் குழுவின் தலைவர் சகராய் கொச்சி கூறியதாவது,

கடந்த ஆண்டின் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனாவும் ஜப்பானும் சிறந்த சாதனை புரிந்தன. ஆசியாவில், குறிப்பாக கிழக்காசியாவில், நீண்டகாலமாக, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா தங்கப்பதக்கங்களுக்காக போட்டியிட்டு வருகின்றன. எனவே, ஆசியா மற்றும் உலகை பார்த்தால், இந்த மூன்று நாடுகளும் விளையாட்டுத் துறையைத் தூண்டும் முக்கிய ஆற்றலாக விளங்குகின்றன. அவற்றிக்கிடையிலான போட்டாப்போட்டியும் நீண்டகாலத்திற்கு தொடரும் என்றார் அவர்.