• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-08 11:05:08    
பாலிக் அமிலம் பற்றி

cri
பாலிக் அமிலம் மனித உடம்புக்கு சத்தூட்டும் ஒரு பொருள். பாலிக் அமிலச்சத்து உள்ள உணவு வகைகளை பெண்கள் பிரவக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்காக பரவலாக உண்கின்றன. இப்போது இதன் இன்னொரு பயன்பாடும் தெரிய வந்துள்ளது. இது ரத்த நாளங்களின் இறுக்கத்தை தளர்த்துவதால் பெண்களுக்கு மிகைப்பதற்றும் ஹைப்பர் டென்ஷன் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கல் கண்டு பிடித்துள்ளநர். இந்த பாலிக் அமிலச்சத்து ஆரஞ்சச்சாறு, பசுமையான இலக்காய்கறிகள் போன்றவற்றில் இயற்கையாகக் கிடைக்கிறது. ஆனால் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் இந்தச் சத்து உடம்பில் பெருமளவுக்குச் சேர வேண்டுமாம்.

நுண்ணோக்கிப் படிம் நுட்பம் என்று ஒருவகையான ஆய்வு முறையை அறிவியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். மூளையின் உள்புறம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய இது உதவுகிறது. இதனால் காக்கா வலிப்பு, நினைவு மறாதி நோய், நடுக்குவாத நோய் போன்ற சிக்கலான நோய்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள முடியும். இதை முளையைப் பார்க்கும் முறை என்று நரம்பியல் துறைப் பேராசிரியர் ஆர்.கிளே ரீட் கூறுகிறார். இவரும், இவருடைய ஆய்வுக் குழுவினரும் அண்மையில் ஒரு எலியின் மூளையில் நியூரான்களின் செயல்பாடு பற்றி முதன்முறையாக ஆராய்ந்தனர்.

சீனாவில் குவாங்ச்சி ச்சுவாங் இன தன்னாட்சி பிரதேசத்தின் வுமிங் நகர் அருகே ஒரு கிராமத்தில் 70 வயது முதய விவசாயி ஒருவர் தம்முடைய வீட்டிலேயே வானொலி நிலையம் நடத்துகிறார். அந்த கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை அடுத்து, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அந்த முதியவர் நினைத்தார். இதற்காக வானொலி நிலையம் தொடங்கலாம் என ஓராண்டுக்கு முன்னர் தீர்மானித்து, அதற்கு வேண்டிய கருவிகளை வாங்கினார். பின்னர் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் தொடங்கினார். அரசுக்கொள்கை, உள்ளூர் மக்களின் நல்ல செயல்கள் போன்ற தகவல்களை ஒலிபரப்புகிறார்