 இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவப் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வருகின்றார். பயிற்சியின் ஒரு கட்டமாக அவர் கழிவறையை சுத்தம் செய்கினார்.
ராணுவப் பயிற்சி பெறும் மற்றவர்களைப் போல இளவரசர் ஹாரியும் கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்கின்றார்.
தன்னிச்சையான அதிகாரியாவதற்கான பயிற்சியின் ஒரு அங்கம் இது என்று ஒரு ராணுவ அதிகாரி கூறினார்.
பார்க்கும் பெண்களை எல்லாம் முத்தாமிடுபவன்
நெதர்லாந்து நாட்டில் ஆர்மஸ்டர்டாம் நகரில் ஒரு மர்ம மனிதன் பார்க்கும் பெண்களை எல்லாம் முத்தமிட்டு வருகின்றான். இதுவரை ஏழு பெண்கள் போலீசல் புகார் கொடுத்துள்ளனர். அவனைப் போலீசார் தேடி வருகின்றார்கள்.
பாதாள ரெயில் நிலையத்தில்தான் அவன் பெண்களுக்கு முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கின்றான்.
பெண்களை அவர்களின் பின்பக்கமாகச் சென்று தோளில் தட்டுவான். அவர்கள் திரும்பிப் பார்த்ததும், அவர்கள் வாயில் முத்தம் கொடுப்பான்.
பதினேழு முதல் முப்பது வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பான். அவன் நீண்ட கோட்டு அணிந்து தலையில் தொப்பி வைத்து இருப்பான்.
அவனைப் போலீசார் தேடி வருகின்றார்கள்.
தேவாலயம் விற்பனைக்கு
ஜெர்மனியில் பெர்லின் நகரிலுள்ள பிராட்டஸ்டண்ட கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு தீப்பிடித்தது இதனால் தேசம் அடைந்த அந்த தேவாலயம் பயன்படுத்தப்படாம்ல இருந்து வருகின்றது. உடனடியாக ஏழு கோடி ரூபாய் தேவைப்படுகின்றது அந்த அளவு பணம் எங்களிடம் இல்லை. அதனால், தேவாலயத்தை விற்க முடிவு செய்து விட்டோம் என்று கிறிதவ பாதிரியார் பிரீடர் கூறினார்.
இந்த இடம் மசூதி கட்டுவதற்கு ஏற்றது. அதை கட்டுவதற்கு முன் வருபவர்களிடம் விற்த்தயாராக இருக்கின்றோம் என்று அவர் கூறினார்.
|