வி-------நேயர் நேரத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வர வேற்பது
ரா-------ராஜாராம்
வி--------விஜயலட்சுமி. வணக்கம், ராஜா இன்றைய கடிதங்களைப் பார்க்கலாமா
ரா-------முதல் கடிதம் விழ்ப்புரம் முத்துசிவக்குமாரன் எழுதியது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரையிலான நிகவ்ச்சிகளைப் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆகஸ்ட் 3 உங்கள் குரல் நிகழ்ச்சியில் செல்வத்தின் கேள்விகளும், கிடைத்த பதில்களும் நேயர்களின் பல சந்தேகங்களைப் போக்கி விட்டன. செப்டம்பர் 5 உணவு அரங்கம் நூடுல்ஸ் பற்றி விரிவாக விளக்கியது. மக்களும் சீன உணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த பாம்பு, தவக்களை இவைகளை எப்படி சாப்பிடுகிறார்கள் என்பது தான் புதிராக உள்ளது. ஒரு வேளை சாப்பிட்டு பழகி விட்டால் பாம்பும் பாயாடம் ஆகிவிடுமோ என்கிறார்.
வி-------அன்பு நேயரே, சீன உணவு பற்றிய உங்கள் புதிருக்கு விடை கூற, ஒரு விரிவான நிகழ்ச்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் ஒலிபரப்பாகும். சரிதானே
ரா-------ஈரோடு மாவட்டம் எஸ் கே பாப்பம் பாளையம் பி டி சுரேஷ்குமார் அண்மையில் பகளாயூர் நாச்சிமுத்து அவர்களை சந்தித்து, சீன வானொலி நிகழ்ச்சிகளின் மேம்பாடு பற்றி விவாதித்தாகக் கூறுகிறார்.
சேலம் செவ்வாய்ப் பேட்டை நேயர் கே பாலாஜி, இப்போது ஒலிபரப்பாகும் சீனக்கதை நிகழ்ச்சி புது உற்சாகம் தருகிறது. துப்பறியும் கதை கேட்பதற்கு அருமையாக இருந்தது. முதல் துப்பறியும் கதையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் யூகித்த விடை சரியாக இருந்தது. இது போன்ற கதைகளை தினமும் ஒலிபரப்புவீர்களா என்று கேட்கிறார்.
வி------தினமும் ஒலிபரப்ப இயலாது. அவ்வப்போது ஒலிபரப்புவோம்.
ரா-------பெரம்பலூர் மாவட்டம் சலுப்பை என்ற ஊரில் இருந்து கி பாஷ்யம் சீன வானொலிக்காக தன்னால் இயன்ற சேவைகளைச் செய்வதைகக் கூறுகிறார். ஈரோடு மாவட்டம் கொங்கம் பாளையம் செ கணேசன் செப்டம்பர் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதியுள்ளார். அறிவியல் உலகம் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாமே என்று யோசனை கூறுகிறார். நட்புபாலம் நிகழ்ச்சியில் சீனாவை இரண்டாவது வீடாகக் கொண்டு வாழ்ந்து வரும் பொறியாளர்கள் கோவிநாத் முத்துராமன் பேட்டி சிறப்பாக இருந்தது. சீனாவல் தமிழர் மன்றம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அது மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். கோவை மாவட்டம் தென்பொன்முடி நேயர்கள் மணிகண்டன் நாகமணி ஆகஸ்ட் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதியுள்ளார். 19-8 2005 நட்புப் பாலம் நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த கணக்குத் தணிக்கையாளர் ரகுபதியின் பல குரல் நிகழ்ச்சி கேட்டு வயிறு குலுங்க கிரித்தேம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முஜிபுர் ஹ்மான் பேட்டி வளரும் நேயர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.
வி-----நேயர்களின் யோசனைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
|