சீனாவில் அன்னிய வர்த்தகம்
cri
இவ்வாண்டின் முதல் பத்து திங்களில், சீனாவின் அன்னிய வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி, ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. கடந்த ஆண்டு முழுவதிலும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொத்த ஏற்றுமதி இறக்குமதி அளவை நெருங்கி விட்டது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 24 விழுக்காடு அதிகமாகும் என்று சீனச் சுங்கத் துறையின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட புள்ளி விவரம் கூறுகிறது. இவ்வாண்டின் முதல் பத்து திங்களில், சீனாவில் பொது வர்த்தகத்தின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து, இறக்குமதியும் படிப்படியாக அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரம் காட்டுகின்றது.
|
|