• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-15 11:21:34    
சீனாவில் வரவேற்கப்படும் கோல்வ் (1)

cri

நவர்பர் 10ஆம் நாள் முதலாவது HSBC கோல்வ் சாம்பியன் பட்டப் போட்டி சீனாவின் ஷாங்கை மாநகரில் துவங்கியது. உலகில் புகழ்பெற்ற வீரர்களான TIGER WOODS, VIJAY SHINGH, COLIN MONTGOMERIE முதலியோர் இந்த போட்டியில் கலந்துகொள்கிறார்கள். மேலும் அதிகமான சீன மக்கள் கோல்வ் விளையாட்டை அறிந்து, உலக நிலை கோல்வ் நட்சத்தினர்களை நேரில் சந்திக்கத் துணைபுரிவது இந்த போட்டியை நடத்துவதன் நோக்கமாகும்.

தற்போது, கோல்வ் விளையாட்டு சீனாவில் மேன்மேலும் வரவேற்கப்படுகின்றது. HSBC கோல்வ் சாம்பியன் பட்டப் போட்டி இன்றுவரை சீனாவில் நடத்தப்படும் உச்ச நிலை கோல்வ் போட்டியாகும். உலக பெயர் வரிசையில் முதலிடம் வகிக்கும் TIGER WOODS, இரண்டாம் இடம் வகிக்கும் VIJAY SHINGH உள்ளிட்ட நட்சத்திர விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வதும், சீனாவின் முதல் நிலை வீரர் சாங் லியன் வெய் முதலியோர் புகழ்பெற்ற வீரர்களுடன் போட்டியிடுவதும் ஏராளமான கோல்வ் விரும்புவோரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்தப் போட்டி பற்றி பேசிய சீன கோல்வ் சங்கத்தின் துணைத் தலைவர் லீ யோங், கோல்வ் சீனாவில் வளர்வதற்கு இந்த போட்டி உறு துணைபுரியும் என்றார். அவர் மேலும் வருமாறு கூறினார். இத்தைகைய போட்டியை நடத்துவது, இந்த விளையாட்டை சீனாவில் பரவுவதற்கு நல்லது. இந்த முறை, நாங்கள் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை சீனாவுக்கு அழைத்துள்ளோம். கோல்வ் ஒரு வகை விளையாட்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள உதவி செய்து, நட்சத்திர வீரர்களின் செல்வாக்கை பயன்படுத்தி, இந்த விளையாட்டை வளர்ப்பதே எங்கள் நோக்கம்.

கோல்வ் விளையாட்டு முதலில் ஐரோப்பாவில் துவங்கியது. 18வது நூற்றாண்டில் இதர பிரதேசங்களுக்கு பரவியது. 1980ஆம் ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் இந்த விளையாட்டு துவங்கியது. பெய்சிங், ஷாங்கை, சென்சென் முதலிய இடங்களில் அடுத்தடுத்து கோல்வ் மன்றங்களும் கோல்வ் மைதானங்களும் நிறுவப்பட்டன. இந்த நேரத்தில் சீனாவின் கோல்வ் விளையாட்டும் வளரத் துவங்கியது.

1985ஆம் ஆண்டு சீனாவின் கோல்வ் சங்கம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இவ்வாறு இந்த விளையாட்டு சீனாவில் ஒழுங்கான முறையிலும் திட்டத்தின் படியும் வளர்ந்து வருகின்றது. 1986ஆம் ஆண்டு சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீன கோல்வ் வீரர்கள் முதல் தடவையாக கோல்வ் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவதுடன், சீனாவில் கோல்வ் விரும்புவோர் மேன்மேலும் அதிகரித்து வருகின்றனர்.

விளையாடும் நுட்பமும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது. விளையாட்டு மைதானங்களின் வசதிகள் சீரடைவது, இந்த விளையாட்டில் கலந்துகொள்வோர் அதிகரிப்பது ஆகியன, தொழில் முறை கோல்வ் அணியை அமைப்பதற்கு சிறந்த சூழ்நிலையை தயாரித்துள்ளன. அத்துடன் சாங் லியன் வெய், லியாங் வென் ச்சுங் உள்ளிட்ட சிறந்த தொழில் முறை வீரர்களும் தோன்றியுள்ளனர்.