• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-17 21:51:42    
சீனாவில் வரவேற்கப்படும் கோல்வ் (2)

cri

பல நாடுகளில் கோல்வ் விளையாட்டை ஒரு நாகரிக மிக்க விளையாட்டு, ஒரு ஆடம்பர விளையாட்டு அல்ல. சாதாரண மக்களும் அதை விளையாடலாம் என்று கருதப்படுகின்றது. அமெரிக்காவில் 2 கோடியே 60 லட்சம் மக்கள் கோல்வ் விளையாடுகிறார்கள். 20 ஆயிரம் கோல்வ் மைதானங்கள் உண்டு. அவற்றில் 30 விழுக்காட்டு மைதானங்கள் சாதாரண மக்களுக்கானவை. ஒருவர் ஒரு முறை விளையாடுவதற்கான செலவு 10 அல்லது 20 அமெரிக்க டாலர் மட்டுமே.

20 ஆண்டுகால வளர்ச்சிக்கு பின், சீனாவில் கோல்வ் தொழில் துறை பூர்வாங் ரீதியில் உருவாயிற்று. பூர்வாங்க புள்ளி விபரங்களின் படி, தற்போது சீனாவில் 45 லட்சத்துக்கு அதிகமானோர் கோல்வை விரும்பி, விளையாடுகிறார்கள். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக உலகில் இரண்டாவது பெரிய கோல்வ் விளையாட்டு கருவி உற்பத்தி நாடாக தற்போது சீனா விலங்குகின்றது.

அத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அமெரிக்காவைத் தாண்டி, இந்த சந்தையின் 70 விழுக்காட்டு பங்கினை சீனா வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை சர்வதேச கோல்வ் சங்கத்தின் புள்ளி விபரம் காட்டுகின்றது. அமைப்பு வசதிகள் படிப்படியாக முழுமையாவதுடன் மேன்மேலும் அதிகமான சீன மக்கள் கோல்வ் விளையாட்டை வரவேற்கிறார்கள்.

கோல்வ் விளையாட்டு, வயது, இனம் ஆகிய கட்டுப்பாடு இல்லாமல் முதியோர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஏற்றது. கோல்வ் விளையாட்டில் ஈடுபட்டவர்களில் 80 விழுக்காட்டினர் இறுதியில் இதை விரும்புகிறார்கள். அத்துடன் விளையாடும் போக்கில் மனிதர்களுக்கிடையிலான நட்புணர்வும் தொடர்பும் வளரும் என்பதை ஒரு ஆய்வின் முடிவு காட்டுகின்றது.

மேன்மேலும் அதிகமான சீன மக்கள் இந்த விளையாட்டில் ஈடுபடுவதுடன், இந்த விளையாட்டுக்கு சீனாவில் நல்ல வளர்ச்சி வாய்ப்பு உண்டு. எதிர்காலத்தில், சீன விளையாட்டு வீரர்கள் உலகப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பும் உண்டு என்று இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அமெரிக்காவின் புகழ்பெற்ற வீரர் TIGER WOODS கருத்து தெரிவித்தார்.

சீனாவில் கோல்வ் விளையாட்டில் ஈடுபடுவோர் மேலும் அதிகரிப்பார்கள். அத்துடன் மேலும் அதிகமான பெரிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை. இது ஒரு சரியான திசையாகும் நான் கருதுகின்றேன். இப்பொழுது மேன்மேலும் அதிகமான சீன மக்கள் கோல்வ் விளையாட்டில் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் பல இளைஞர்களும் அடங்குவர். எனவே, சீன மக்கள் எதிர்காலத்தில் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவது உறுதி. இறுதியில் சீன வீரர்கள் முக்கிய போட்டிகளில் சாமபியன் பட்டம் பெறுவார்கள் தாம் உறுதியாக நம்புவதாக TIGER WOODS கூறினார்.