• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-16 08:42:22    
எட்டு லிட்டரில் உலகைச் சுற்றலாம்

cri

எட்டு லிட்டரில் உலகைச் சுற்றலாம்
பெட்ரோல்-டிசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. இதே போல் இரு சக்கர மற்றஉம் 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் மாற்று எரிபொருள் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச விஞ்ஞானிகளும் ஈடுபட்டு உள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பெடரல் டெக்னிக்கல் பல்கலைக்கழகம் சிக்கனமாக எரிபொருள் மற்றும் குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லும் வாகனங்களை உருவாக்குதல் ஆசியவை குறித்து ஆய்வுகள் நட்தித வருகின்றது. இந்த நிறுவனம் தயாரித்து கார் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு செயல்படுவதாகும். இந்த காரில் எட்டு லிட்டர் ஹைட்ரஜன் எரி பொருள் நிரப்பினால் போதும். உலகை ஒரு முறை வலம் வரலாம். இந்த கார் உலகின் மிகவும் சிக்கனமான கார் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாதிகளுக்கு உடல் தகுதித் தேர்வு
ரஷியாவில் இருந்து பிரிந்த கிர்கிஸ்தானில் எம்.பி. பதவி பொறுப்புகளை ஏற்கும் அரசியல் தலைவர்கள் உடல் தகுதி தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இடைக்கால அதிபர் குர்மான்பெக் பேகியேவ் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் கலாசார்த்தை வளர்க்க வேண்டும் என்று இடைக்கால ஜனாதிபதி கூறினார்.
இன்றுமுதல் அரசியல் தலைவர்களும், எம்,பி.க்களும் பதவி ஏற்கும் முன்பு ஓடுவது, குதிப்பது, எடை தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் பதவி கிடைக்கும் என்று குர்மான் பெக் பேகியேவ் கூறினார்.
 
குழந்தைகள் சினிமா பார்க்க தடை
நார்வே நாட்டில் 7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சினிமா படங்களை குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பார்ப்பதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.
குழந்தைகள் வன்முறை, செக்ஸ் காட்சிகளைப் பார்ப்பதை ஆபத்தானது. அளவுக்கு அதிகமான சத்தம் குழந்தைகளுக்கு பீதி அடையச் செய்யும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
நடுரோட்டில் பண மழை
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேர் கார்வாங்குவதற்காக 8 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கில் சென்றனர். வின்சஸ்டர்நகர் அருகே மோட்டர்சைக்கிள் ெசன்ற போது பணப்பை வெடித்தது. அதில் இருந்த பவுண்டு நோட்டுகள் காற்றில் பறந்தன. பணமழை பொழிந்தது போல் ரூபாய் நோட்டுக்கள் விழுந்தன.
ரோட்டில் வாகனங்களில் சென்றவர்கள் எல்லாம் வாகனத்தை நிறுத்திவிட்டு நோட்டுகளை சேகரித்து கொடுக்க முற்பட்டனர். ஆனால் பலத்தகாற்று வீசி நோட்டுகளை சூறையாடி விட்டது. மிஞ்சியது வெறும் முப்பத்தெட்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே.
பணத்தை பறிகொடுத்தவர்களின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் காரை ஓட்டிவந்த ஜுடிமிசென், பவுண்டு நோட்டுக்கள் மழை போல விழுந்தன.
முதலில் அவை வெறும் காகிதம் போல் இறுந்தது. அட கடவுளே அவை அத்தனையும் பணம் என்று கூறி ஆச்சரியப்பட்டார்.