• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-16 11:21:27    
தமிழ் மூலம் சீனம் பாடம் 38

cri
வணக்கம். இன்றும் நாம் புதிய பாடத்தை படிக்காமல் இரண்டும் உரையாடல்களை மீண்டும் பார்க்கின்றோம்.

முதலில் முதலாவது உரையாடலை கேளுங்கள்

தமிழ் மூலம் சீனம் பாடநூலைத் திறந்து 21ஆம் பக்கத்திலுள்ள உரையாடல் 3 பாருங்கள்.

ZAI JIAN, ZHU NIN LU TU YU KUAI!

XIE XIE, NIN DUO BAO ZHONG!

நீங்கள் நண்பரை வழியனுப்பி, பிரியாவிடை பெறும் போது, ZAI JIAN,ZHU NIN LU TU YU KUAI!என்று நண்பரிடம் சொல்லலாம். நண்பர் பதிலளிக்கும் போது, XIE XIE, NIN DUO BAO ZHONG!என்று அவர் சொல்லலாம்.

ZHU NIN LU TU YU KUAI என்ற வாக்கியத்திலுள்ள ZHU என்றால், வாழ்த்துவது என்பது பொருள். LU TU என்றால், பாயணத்தின் போது, அல்லது பயணத்தின் போக்கில் என்பது பொருள். YU KUAI என்றால், மகிழ்ச்சி என்பது பொருள்.

NIN DUO BAO ZHONG! என்ற வாக்கியத்திலுள்ள BAO ZHONG என்றால், உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்பது பொருள்.

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தை வழங்குகின்றோம்.

ZAI JIAN, ZHU NIN LU TU YU KUAI!

வணக்கம், மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்ளுங்கள்.

XIE XIE, NIN DUO BAO ZHONG!

நன்றி, நலமாக இருங்கள்.

இப்பொழுது இன்றைய இரண்டாம் உரையாடலை, அதாவது பாடநூலின் 22ஆம் பக்கத்திலுள்ள உரையாடல் 4 படிக்கின்றோம். முதலில் இந்த உரையாடலை ஒருமுறை கேளுங்கள்.

ZAI JIAN, DAO NA ER LAI XIN!

HAO, WO YI DONG XIE XIN。

இந்த உரையாடலும் பிரியாவிடை பெறும் பொது, பயன்படுத்தப்படுகின்றது. DAO NA ER LAI XIN!என்ற வாக்கியத்திலுள்ள DAO என்ற சொல்லுக்கு, அடைவது என்பது பொருள். NA ER என்றால், அங்கு என்பது பொருள். LAI XIN என்றால், கடிதம் எழுதி அனுப்புவது என்பது பொருள். HAO, WO YI DONG XIE XIN என்ற வாக்கியத்திலுள்ள HAO என்றால் சரி என்பது பொருள். YI DING என்ற சொல்லுக்கு, கண்டிப்பாக என்பது பொருள், XIE XIN என்ற சொல்லின் பொருள், கடிதம் அல்லது மடல் எழுதுவது என்பதாகும்.

இப்பொழுது இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

ZAI JIAN, DAO NA ER LAI XIN!

HAO, WO YI DING XIE XIN。

இன்று, பிரியாவிடை பெறுவது பற்றிய இரண்டு உரையாடல்களை மீண்டும் படித்துள்ளோம். இதுவரை, மூன்றாம் பாடத்தின் அனைத்து அம்சங்களையும் படித்திருக்கின்றோம். மூன்றாம் பாடத்தில், நன்றி, மன்னிப்பு, பிரியாவிடை ஆகியவை பற்றிய சில வாக்கியங்களையும் உரையாடல்களையும் ஒரு முறை படித்துள்ளோம். இவ்வளவு அதிக அம்சங்களை மனதில் பதித்திருப்பது உங்களை பொறுத்தவரையில் மிகவும் கஷ்டம் தான். பரவாயில்லை. அடுத்த இரண்டு திங்கள் காலத்தில் இந்த பாடத்திலுள்ள எல்லா உரையாடல்களையும் மீண்டும் ஒரு முறை படிக்க உள்ளோம். அத்துடன் முன்பு நாம் படித்துள்ள சொற்களையும் இந்த பாடத்தில் தோன்றிய சொற்களையும் வாக்கியங்களையும் கொண்டு சில புதிய உரையாடல்களையும் சொல்லிக் கொடுக்கின்றோம். இதன் மூலம். நாம் படித்தத்தை மீண்டும் மீண்டு பயன்படுத்தி, பயிற்சி செய்து, படிப்படியாக மனதில் பதிந்திருக்க பாடுபடுவோமாக.