கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியில் கலையரசியும், ராஜாராமும் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தொழில் நிலுவனங்களின் வளர்ச்சி பற்றி கூறுகின்றோம்.
ராஜா.... சீனாவின் வட மேற்கு பகுதியில் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் அமைந்துள்ளது. நீண்டகாலமாக தகவல் தொடர்பிலும் உற்பத்தித் துறையிலும் பின்தங்கியிருந்ததால் அங்குள்ள பல தொழில் நிறுவனங்கள் முக்கியமாக துவக்க நிலை உற்பத்தி பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.
கலை....அதேவேளையில் பொருள் உற்பத்தியில் போட்டியிட முடியாமல் பலவீனமடைந்தது. இதனால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நிலைமையும் அவ்வளவு மன நிறைவு தருவதாக இல்லை.
ராஜா....கடந்த அக்டோபர் திங்கள் முதல் நாள் சீன தேசிய தினம் கொண்டாடப்பட்ட வேளையில் சிங்கியாங் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவு நாளும் கொண்டாட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பல தொழில் நிறுவனங்களின் உற்பத்தி முன்பை விட மேம்பாடு கண்டுள்ளது. அவற்றின் உற்பத்தி பொருட்களும் உள் நாட்டு சந்தையில் மட்டுமல்ல சர்வதேச சந்தையிலும் போட்டியிடும் திறனைப் பெற்றுள்ளன என்று சிங்கியாங்கில் எமது செய்தியாளர்கள் பேட்டி கண்ட போது கண்டறிந்துள்ளனர்.
கலை......இதற்கு என்ன காரமம்?இது பற்றி நீங்கள் நமது நேயர்களுக்கு விளக்கிக் கூறலாமா?
ராஜா.....இதற்கு காரணம் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கமாகும்.
கலை......உதாரணம் காட்டி விளக்கும் சொல்லலாமே.
ராஜா....கண்டிப்பாக. சிங்கியாங்கின் சிறப்பு மின்சார உற்பத்தி கட்டுப்பாட்டு தொழில் நிறுவனத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த தொழில் நிறுவனம் சிங்கியாங்கில் தோன்றி வளர்ச்சியடைந்துள்ள தொழில் நிறுவனமாகும்.
கலை.....எனக்கு புரிந்தது. இந்த தொழில் நிறுவனம் கடந்த ஆண்டில் விற்பனை மூலம் பெற்றுள்ள வருமானம் 500 கோடி யுவானை தாண்டியுள்ளது என்று நான் கேள்விப்பட்டேன்.
ராஜா.....இந்த தொழில் நிறுவனத்தின் முந்திய நிலைமை பற்றி உங்களுக்கு தெரியுமா?
கலை.....தெரியாது. என்னை போலவே நேயர்கள் இது பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இதை விவரியுங்கள்.
ராஜா....மகிழ்ச்சியுடன் விளக்கி கூறுகின்றேன். தற்போது சீனாவிலேயே மிகப் பெரிய மின்சார கட்டுப்பாட்டு கருவிகள் உற்பத்தி நிறுவனமான அந்த கூட்டு குழுமம் சில ஆண்டுகளுக்கும் முன் திவாராகும் சிறிய தொழில் நிறுவனமாக இருந்தது.
கலை.... அப்படிப்பட்ட சூழ்நிலையைச் சமாளிக்க இந்த நிறுவனம் எந்த நடவடிக்கை மேற்கொண்டது?அவை பற்றி சொல்லுங்கள்.
ராஜா....துவக்கத்தில் தொழில் நிறுவனம் சிறப்பு மின்சார கட்டுப்பாட்டு கருவிகளை உற்பத்தி செய்ய வில்லை. அதன் ஆண்டு விற்பனை அளவு 2 லட்சம் யுவான் மட்டுமே. கடனோ 7 லட்சம் யுவானுக்கும் மேலே இருந்தது. இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற மனவுறுதியுடன் உற்பத்தியை மாற்றி சிறப்பு மின்சார கட்டுப்பாட்டு கருவிகளை உற்பத்தி செய்ய துவங்கியது. இந்த நிலைமையில் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தையும் உற்பத்தித் திறனை உயர்த்துவதையும் தனது வளர்ச்சிக்கான முதல் கடமையாகக் கொண்டது. இதன் விளைவாக இந்தத் தொழில் நிறுவனம் இன்னல் நிலையிலிருந்து படிபடியாக விடுபட்டது.
கலை.... முன்பு உற்பத்தி செய்த மின்சார அழுத்த மாற்று கருவியை விட்டுவிட்டு நாட்டின் முக்கிய திட்டப் பணிகளில் பயன்படுத்தப்படும் சிறப்பு மின்சார கட்டுப்பாட்டு கருவிகளை உற்பத்தி செய்ததால் அதன் பொருளாதார மதிப்பு என்ன?அதன் மாற்ற வளர்ச்சி பற்றி விபரமாக சொல்லுங்கள்.
ராஜா.....நான் விளக்கி கூறுவதற்கு முன் தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சான் சின் என்ன சொல்கிறார். ..........உரை1...............
முன்பு தயாரிக்கப்பட்ட மின்சார அழுத்த கருவியின் மதிப்பு 15 யுவான் மட்டும். இப்போது சிறப்பு மின்சார கட்டுப்பாட்டு கருவியின் மதிப்பு 50 லட்சம் அமெரிக்க டாலர். இது மட்டுமல்ல முக்கிய மாபெரும் மாற்றம் எது என்று சொன்னால் தற்போதைய உற்பத்தி பொருட்கள் அரசின் முக்கிய திட்டப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் அதே மாதிரி உற்பத்தி பொருட்களில் 20 விழுக்காட்டு பொருட்கள் எங்கள் தொழில் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. எங்கள் தொழில் நிறுவனம் இந்த தொழில் துறையில் முதலாவது இடம் வகிக்கின்றது என்றார் அவர்.
கலை.....இந்த தொழில் நிறுவனம் எந்த மாதிரி மின்சாரக் கட்டுப்பாட்டு உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்கின்றது?
ராஜா.....இந்த தொழில் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் சீனாவின் யாஞ்சி ஆற்றின் மூன்று மலைப் பள்ளத்தாக்கு திட்டப் பணி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அரங்கம், "சங்சோ 5"விண்வெளி ஓடத்தை செலுத்தும் திட்டப் பணி ஆகியவற்றிலும் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் மின்சாரத் தொடரமைப்பு சீரமைப்புத் திட்டப் பணி உள்ளிட்ட முக்கிய திட்டப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
|