கலை—இன்று, மிளகாய் சாஸ் தயாரிப்பு முறை கூறுவேன். சீன சிசுவான் மாநிலத்தின் குளிராக இருப்பதால், அங்கே மிளகாய் சாஸ் மிகவும் பிரபலமானது. குறிப்பாக குளிர்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இந்தச் சாஸ் கண்டிப்பாக தயாரிக்க வேண்டும்.
ராஜாராம்—அப்படியா!முதலில், அதற்கு தேவைப்படும் பொருட்களை சொல்லுங்கள்.
கலை—சரி. மிளகாய் 300 கிராம், வெள்ளைப்பூண்டு 150 கிராம், இஞ்சி 20 கிராம், கொஞ்சம் உப்பு முதலியவை முன்கூட்டியே எடுத்துவையுங்கள்.
ராஜாராம்—நான் மீண்டும் சொல்லலமா? மிளகாய் 300 கிராம், வெள்ளைப்பூண்டு 150 கிராம், இஞ்சி 20 கிராம், கொஞ்சம் உப்பு முதலியவை. சரி, இந்த பொருட்கள் முன்கூட்டியே எடுத்துவைத்திருக்கிறேன். அடுத்து, தயாரிப்பு முறை சொல்லுங்கள்.
கலை—முதலில், மிளகாயை நன்றாக சுத்தம் செய்து, விதைகளை நீக்கி விடவும். அப்புறம், மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, பெரிய கிண்ணத்தில் வைக்கவும்.
ராஜாராம்—சரி, இதில் உப்பு சேர்க்கலாமா?
கலை—ஆமாம். உப்பு, சேர்த்த பிறகு, நன்றாக கிளற வேண்டும். கடைசியில் ஒரு கோப்பையில் வைத்து, மூடிவிடுங்கள்.
ராஜாராம்—இப்போது, மிளகாய் சாஸ் தயாரித்து முடிந்ததா? கலை—ஓ, இல்லை. இந்த கோப்பையை வெய்யில்படாத இடத்தில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். அதன் பிறகு, தின்னலாம்.
ராஜாராம்—அப்படியா!மூன்று நாட்களுக்கு பின்பு, இந்த சாஸை, என்னென்ன வறுவல்களுடன் சேர்ந்து தின்னலாம்?
கலை—பல சீன வறுவல்களைத் தயாரிக்கும் போது இந்த மிளகாய் சாஸைச் சேர்க்கலாம். குறிப்பாக மீன் வறுவலில் சேர்த்தால், மிகவும் சுவையாக இருக்கும்.
ராஜாராம்—நீங்கள் இந்த சாஸ் பயன்படுத்தி, ஒரு வறுவல் தயாரியுங்கள்.
கலை—சரி, மிளகாய் சாஸ் மீன் தயாரிப்பு முறை சொல்கிறேன். முதலில் மீனை சுத்தப்படுத்தவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடுசெய்யணும். சூடான எண்ணெயில் மீனை போட்டு, பொன்னிறமாக ஆகும். வரை பொரிக்கணும். அதை ஒரு தட்டில் எடுத்துவைங்க. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் இருக்கட்டும். அதில் மிளகாய் சாஸ், வெங்காயம், கேரட் ஆகியவற்றையும் போட்டு கிளறி விட்டு, வதக்கணும். பிறகு, அதில் கொஞ்சம் உப்பு, சர்க்கரை, மிளகாய் சாஸ், சோளமாவு போட்டு கெட்டியாக்கணும். அதன் மேலே நல்லெண்ணெயை தெளிச்சி. கடைசியாக அந்த சாஸை மீன் மேலே ஊற்றி பரிமாறுங்க. மிளகாய் சாஸ் மீன் சுவையா இருக்கும்.
ராஜாராம்—சுவையாக இருக்கிறது. கலைமகள், அடுத்த முறை, என்ன உணவு கூறுவீர்கள்?
கலை—அடுத்த வாரம், சீனாவின் தென்பகுதியிலுள்ள குவாங்துங் மாநிலத்தின் மக்களுக்கு விருப்பமான ஒரு சிற்றுண்டியை அறிமுகப்படுத்துவேன். அதற்கு, தேங்காய், சர்க்கரை, பால், முட்டை முதலியவை முன்கூட்டியே எடுத்து வையுங்கள்.
ராஜாராம்—தேங்காய் திண்படமா? நேயர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என நம்புகின்றேன்.
|