
மஞ்சு இனம், நெடிய வரவாறுடைய ஒரு தேசிய இனம். சீனாவின் கடைசி நிலப் பிரபு வம்சமான சிங் வம்ச காலத்தில், மஞ்சு இனத்தவர் ஆட்சி புரிந்தனர். இப்போது, இதர தேசிய இனங்களைப் போல மஞ்சு இன மக்களும் சரி சமமாக, சீனத் தேசிய இனக் குடும்பத்தில் வாழ்கின்றனர். மஞ்சு இனத்தின் பழக்க வழக்கம், பண்பாடு, ஆகியவை மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன.
98 லட்சம் மஞ்சு இன மக்களில் 50 விழுக்காட்டினர், வட கிழக்குச் சீனாவின் லியாவ் நிங் மாநிலத்தில் வாழ்கின்றனர். ஏனெனில், மஞ்சு இனத்தின் ஊற்றுமூலம், இதுவாகும். மஞ்சு இனக்கிராமம், இம்மாநிலத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
சிங் சென் என்பது, இக்கிராமத்தின் பெயர். கிராமத்திலுள்ள பல பத்து குடும்பங்கள் அனைத்தும், மஞ்சு இனத்தைச் சேர்ந்தவை. ஒரு சதூர கிலோமீட்டர் பரப்பளவுடைய இச்சிறிய கிராமம் பற்றி, நிறைய கூறலாம். 400 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய சிங் வம்சகாலத்தின், முதலாவது பேராசர் லுர்ஹர்சாங், இக்கிராமத்தை தலைநகராக்கினார். இப்போது, இக்கிராமத்தின் தெற்குப்பகுதியில், உயரமான நகர வாசல் கட்டடம் பராமரிக்கப்படுகின்றது. "துங் கிங் செங்" என்ற மூன்று பெரிய எழுத்துகள், இதில் பொறிக்கப்பட்டுள்ளன. இப்போது, இக்கிராமத்தின் சுற்றுப்புற நகரின் சுவர், ஏற்கனவே இடிந்து விழுந்தது. நகரக்கட்டிடமும் பாழடைந்தது. கிராமவாசிகள், பெரும்பாலும், அப்போது நகர காவல் படையின் தலைமுறையினர். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர்களின் தற்போதைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மஞ்சு இனத்தின் சில பழக்க வழக்கங்கள், தொடர்கின்றன. குறிப்பாக, குடியிருப்பிடங்களில், மஞ்சு இனத்தின் பாரம்பரியக்கட்டிடப்பாணியும், சில பழக்கங்களும் காணப்படுகின்றன.
மஞ்சு இன மக்களின் வீட்டில் பொதுவாக மூன்று அறைகள் உள்ளன. மேற்கில், உரிமையாளரின் படுக்கை அறை. கிழக்கில் விருந்தினர் அறை. நடுவில் சமையல் அறை. மஞ்சு இனத்தைப் பொறுத்த வரை, மேற்கு, மதிப்புடையது. எனவே, குடும்பத்தில் மதிப்புமிக்கவர், மேற்குப் பகுதியிலான படுக்கை அறையில் வசிக்கின்றனர். படுக்கை அறையில் தெற்கு, வடக்கு, மேற்கு என முப்பக்கங்களிலும் மண்ணால் ஆன, படுக்கைகளின் மீது குடும்பத்தினர் அமரலாம். விருந்தினர், மேற்குப் படுக்கையில் அமரக் கூடாது. ஏனெனில், அதில் உள்ள சிறிய மரத்துண்டில், சிவப்புத்தாளில் மஞ்சு இன மூதாதையரின் பெயர் எழுதப்பட்டுள்ளது. மஞ்சு இனத்தவரின் வீட்டில், மிகவும் மதிக்கப்படும் பொருள், இதுவாகும்.
|