• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-22 16:15:49    
பெய்சிங் ஒலிம்பிக் சின்னங்கள்(1)

cri

2008 பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற 1000 நாட்கள் உள்ள நிலையில், ஒலிம்பிக் சின்னங்களை சீனா வெளியிட்டுள்ளது. ஐந்து ஒலிம்பிக் வளையங்களின் அடிப்படையில், ஐந்து குட்டி நண்பர்கள் இந்தச் சின்னங்களைத் தலையில் அணிந்து காட்சி தருகின்றனர். பெய்ச்சிங் ஒலிம்பிக் சின்னங்கள் ஐந்தும் சீனப் பண்பாட்டின் தனித்தன்மையைச் சித்திரிக்கும் வகையில் அமைந்துள்ளன.

பெய்பெய் நீரின் நிறம் நீலம், நீரும், நீரில் வாழும் மீனும் சீனப் பண்பாட்டில் அமோக அறுவடை மற்றும் வளத்தின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன். மேலும், மீன் நீரில் துள்ளிக் குதித்து நீந்தி விளையாடுவது. நீர் விளையாட்டுக்கள் ஒலிம்பிக்ஸில் பெற்றுள்ள முக்கியத்தைக் குறிக்கும் வகையில், நீர் விளையாட்டுக்களில் வல்லமை பெற்ற பெய்பெய் மீன், ஒலிம்பிக் வளையங்களில் ஒன்றான நீல வளையத்தின் அடிப்படையில் நீல நிறப் பின்னணியில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

உபரி உற்பத்தி, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை, வளமான ஆண்டு என்பதைக் குறிக்கும் பெய்பெய் மீன், மென்மை மற்றும் தூய்மையின் சின்னம். ஐந்து குட்டி நண்பர்களின் வரிசையில் முதலில் உள்ள சிறுவனின் தலையில் நீர் அலைகளில் நீந்தும் பெய்பெய் மீன் அலங்கரிக்கிறது.

ஜிங்ஜிங் பாண்டாவைக் கண்டதுமே குழந்தைகளுக்கு சிரிப்பு பொங்கிக் கொண்டுவரும் அது போகும் இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியை அள்ளித் தெளித்துக் கொண்டு போகும். கருப்பும் வெள்ளையும் கலந்த ரோமங்களுடன் ஆனந்தமாக நடனமாடும் நிலையில் ஜிங்ஜிங் பாண்டா, தாமரைப்பூவின் மீது இருப்பதுபோல சித்திரிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள நேயமான உறவைக் காட்டும் வகையில் செழிப்பான வளத்தின் சின்னமாக தாமரைப்பூவும், இயற்கை நமக்கு கொடுத்த கொடையைப் பாதுகாத்து பல தலைமுறைகளுக்கு இயற்கை அழகைப் பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக, காட்டில் ஓடியாடும் வலிமைபெற்ற பாண்டாவும் தெரிவு செய்யப்பட்டு கருப்புப் பின்னணியில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஒலிம்பிக் வளையங்களில் ஒன்றின் நிறம் கருப்பு.