• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-24 15:07:40    
பெய்சிங் ஒலிம்பிக் சின்னங்கள்(2)

cri

ஹுவான்ஹுவான், ஐந்து குட்டி நண்பர்களின் நடுவில் நடுநாயகமாகத் திகழும் சட்டாம் பிள்ளைச் சிறுவனின் தலையில் அலங்கரிப்பது ஹூவான் ஹுவான் என்னும் ஒளிப்பந்தம். நெருப்பின் நிறம் சிவப்பு. எனவே, ஒலிம்பிக் வளையங்களில் ஒன்றின் நிறமான சிவப்புப் பின்னணியில் இந்த ஒளிப்பந்தம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் உணர்வின் உருவமான ஹுவான்ஹுவான் ஒளிப்பந்தம், உலகெங்கும் அதன் வெளிச்சத்தை வீசி, அனைவருக்கும் பெய்ச்சிங் 2008 ஒலிம்பிக்கிற்கு வழிகாட்டுகிறது. தீ பரவுவதுபோல வேகமாக ஓடு. தீ எகிறுவதைப் போல உயரமாகத் தாவிக் குதி, உடல் வலிமையோடு ஓடியாடி விளையாடு என்று பந்து விளையாட்டுக்காரர்களைத் தூண்டுவது போல இந்தச் சின்னம் தெரிவு செய்யப்பட்டது.

யிங்யிங் யிங்யிங் என்பது தாவித்தாவி வேகமாக ஓடும் திபெத்திய மறிமான். கண் இமைப்பதற்குள் காட்டின் பெரும் பகுதியை ஓடிக்கடக்கக் கூடியது. இயற்கையோடு இயைந்த வாழ்வினால், உடம்புக்குக் கிடைக்கும் வலிமையை எடுத்துக்காட்டும் சின்னமான யிங்யிங் மான், பெய்ச்சிங் ஒலிம்பிக் சின்னங்களின் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும்.

பறந்தோடும் வேகத்துடன் ஒலிம்பிக் சின்னத்தில் காட்சிதரும் சிங்காய்-சிபெத் பீடபூமியின் அரிய உயிரினமான யிங்யிங் மறிமான், பசுமை ஒலிம்பிக்ஸில் சீனாவின் பற்றை எடுத்துக் காட்டுகிறது. ஐந்து குட்டிநண்பர்களில் ஒருவன், சிங்காய் திபெத் மற்றும் சிங்ஜியாங் பண்பாடுகளில் காணப்படும் அழகிய வேலைப்பாடுகளை தலை அலங்காரமாகக் கொண்டுள்ளான், துள்ளித்திரியும் சிறுவன், ஒலி்பிக் வளையங்கள் ஒன்றின் நிறமான ஆரஞ்சு வண்ணப் பின்னணியில் காட்சி தருகிறான்.

நீனி ஐந்து குட்டி நண்பர்களில் கடைக் குட்டியாகத் திகழ்வது நீனி. சீனாவில் வசந்த-கோடை காலங்களில் வானை நிறைக்கும் வண்ண் வண்ணப் பட்டங்களை பல உயிரினங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றில் முக்கியமானது நீனி எனப்படும் தூக்கணாங் குருவி. இதனுடைய பொன்னிற இறக்கை, எல்லையற்ற வான்வெளியில் அது பறந்துசெல்லும் போது கொண்டுவரும் ஆனந்தத்தையும் அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. உடல்திறன் காட்டுவதில் கெட்டிக்காரத்தனமான நீனி குருவி, ஒலிம்பிக வளையங்களில் ஒன்றின் நிறமான பச்சை நிறப் பின்னணியில் காட்டப்பட்டுள்ளது.

"ஓர் உலகம் ஒரே கனவு" என்ற 2008 பெய்ச்சிங் ஒலிம்பிக் உணர்வைப் பரப்பும் நேரக் கோடு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த ஐந்து குட்டி நண்பர்களும் விளையாட்டுப் பந்தயம் மூலமாக உலகெங்கும் நேசக் கரத்தை நீட்ட விரும்பும் சீன மக்களின் ஆழந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன.